குப்பை சேகரிக்க 'பேட்டரி' வாகனம் 1,691 வாகனங்கள் வாங்க முடிவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
05:55

திருப்பூர்:தமிழகத்தில், இரண்டு மாநகராட்சி மற்றும் 87 நகராட்சிகளில், துப்புரவு பணி மேற்கொள்ள, 30.43 கோடி ரூபாய் மதிப்பில், 1,691 பேட்டரியால் இயங்கும் சிறிய வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட உள்ளது.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பரவலாக்கப்பட்ட நுண்ணுயிர் உர மையம் அமைக்கவும், 'பயோ மைனிங்' திட்டத்தை அமல்படுத்தவும், மாநில உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, குப்பை சேகரிப்புக்கு, பேட்டரியால் இயங்கும் சிறிய வாகனம் மற்றும் இலகு ரக வாகனங்களை பயன்படுத்த, நகராட்சிகளின் நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சி பரப்பளவுக்கு ஏற்றவாறு, 4 முதல், 57 எண்ணிக்கையில் வாகனங்கள் தருவிக்க, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில், திருப்பூர் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு, 8.30 கோடி ரூபாய் மதிப்பில், 362 பேட்டரி வாகனம், 32 இலகு ரக வாகனம், 87 நகராட்சியில், 43.08 கோடி ரூபாயில், 1,329 பேட்டரி வாகனம், 342 இலகு ரக வாகனங்கள் வாங்கப்படுகிறது. இதற்கான, சுற்றறிக்கை, ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருப்பூர் மண்டலத்தில், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாராபுரம் நகராட்சிகளில் தலா, 21.60 லட்சம் ரூபாய் மதிப்பில், தலா, 12 பேட்டரி வாகனங்கள்; வால்பாறை மற்றும் காங்கயம் நகராட்சியில், தலா, 9 லட்சத்தில், தலா, 5 வாகனம், உடுமலை மற்றும் பல்லடம் நகராட்சிகளில், தலா, 27 லட்சத்தில், தலா, 15 வாகனங்கள் வாங்கப்படுகிறது.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X