| சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு... Dinamalar
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:38

தெருவில் ஓடும் கழிவுநீர்

மதுரை திருநகர் 5வது பஸ் ஸ்டாப் சீனிவாசா நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் முன் கழிவுநீரை அகற்றி சாக்கடையை சீரமைக்க

வேண்டும்.

- சாமுவேல், சீனிவாசா நகர்.

குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீர்

மதுரை புது நத்தம் ரோடு பொறியாளர் நகர் பின் பகுதியில் குடியிருப்புகளை கழிவு நீர் சூழ்ந்துள்ளது. குழந்தைகள், முதியோர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருப்பதால் வெளியே நடமாட முடியவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜூ, பொறியாளர் நகர்.

தெப்பக்குளம்

மண்டபத்தில் குப்பை

மதுரை மாரியம்மன் தெப்பகுளம் மைய மண்டபத்தில் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். மண்டப வளாகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பாலிதீன் பைகள் என குப்பை சிதறிக் கிடக்கிறது. வரலாற்று சின்னமான மண்டபத்தை

முறையாக பராமரிக்கலாமே.

- பிரசாத்குமார், அண்ணாநகர்.

குடிநீர் குழாய் உடைப்பு

மதுரை புது நத்தம் ரோட்டில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிக்காக மணல் சோதனை செய்ய தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குழாய் இணைப்பு உள்ள இடத்தை சரியாக கண்டறிந்து அதற்கு ஏற்ப பணிகளை செய்ய வேண்டும்.

- சிவக்குமரன், அய்யர்பங்களா.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X