விழிப்பில்லா விழிப்புணர்வு! *மழைநீரோடு கழிவுநீரும் கலந்து வருது * நோய்கள் பரவுவதற்கு முன்பே நடவடிக்கை அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:43

வத்திராயிருப்பு:குடிநீருக்காக ஒவ்வொரு ஊரிலும் இணைப்புதாரர்களால் தெருக்களில் தோண்டப்படும் குழிகளில் மழைநீரோடு வாறுகால் கழிவுநீரும் சென்று சேர்வதால், அதன்மூலம் குடிநீரில் கழிவுநீர் கலந்து மற்றவர்களுக்கும் செல்கிறது.குறைவான கழிவுநீர் மிக அதிகளவு நீரில் கலப்பதால், விழிப்புணர்வு இல்லா மக்கள் அதையே பயன்படுத்தி வருகின்றனர்.


மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து ஊர்களிலும் குடிநீர் இணைப்புதாரர்கள் குழிகள் தோண்டியே தண்ணீர் பெறுகின்றனர்.பெரிய வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயும், சிறியவீடுகளில் வசிப்பவர்கள் தெருக்களிலும் குழிகள் தோண்டி இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் தெருக்களில் தோண்டப்படும் குழிகள்பெரும்பாலும் வாறுகால்களை ஒட்டியே தோண்டப்படுகிறது.


வாறுகால்கள் அடைபட்டு நிரம்பி வழியும்போது கழிவுநீர், அதன் அருகில் உள்ள குடிநீர் குழிகளில் புகுந்து விடுகிறது.குழிகளில் உள்ள குடிநீர் குழாய்களுக்குள் அந்த கழிவுநீர் சென்று மெயின் பைப் லைனுக்கு செல்கிறது.


இதன்வழியே வினியோகமாகும் குடிநீரில் இந்த கழிவுநீரும் கலந்து விடுவதால் அனைவருக்கும் இந்த கழிவுநீர் கலந்த குடிநீரே வினியோகமாகிறது. இது பெரும்பாலான ஊர்களில் அன்றாடம் நடைபெற்று வருகிறது. குறைவான கழிவுநீர் மிக அதிகளவு தண்ணீரில் கலப்பதால், அதன் வீரியம் குறைந்து யாருக்கும் இதன் விபரம் இன்றுவரை தெரியவில்லை.


மழைநேரத்தில் கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து பெரும்பாலான குழிகளில் தேங்கி விடுவதால் ,அந்த சமயங்களில் மட்டும் இதன் பாதிப்பை மக்களால் உணர முடிகிறது.காலரா, டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு நோய்களுக்கு மூலகாரணமாக உள்ள இப்பிரச்னையை கண்டுகொள்வதே இல்லை. எனவே அவற்றை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குழிகளை மூடுங்க


வீட்டுக்கு வீடு மாறிமாறி குழிகளை தோண்டி குடிநீர் பிடிப்பதால் தெருக்களின் இருபுறமும் குழிகளால் நிறைந்துள்ளது. பல தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது. வாகன போக்குவரத்துக்கு கூட வழியின்றி முடங்கும் நிலையில் உள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள இந்த குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான குழிகளை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--சுபாஷ், சமூகஆர்வலர், ரெங்கப்பநாயக்கர்பட்டி





 

மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X