| பலம் இழக்கும் 129 ஆண்டு பழமையான ஏ.வி., பாலம் Dinamalar
பலம் இழக்கும் 129 ஆண்டு பழமையான ஏ.வி., பாலம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:45

மதுரை, மதுரை வைகை ஆறு ஏ.வி., பாலத்தின் அஸ்தி

வாரம் பலம் இழந்து

ஆட்டம் காணும் அளவிற்கு சேதமாகி உள்ளது. பாலத்தின் மேலே கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்பட்டு அதிர்ச்சி தருகிறது.

சிம்மக்கல் - கோரிப்

பாளையத்தை இணைக்கும்

இந்த பாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1889ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது இளவரசராக இருந்த

ஆல்பர்ட் விக்டர் நினைவாக ஏ.வி., பாலம் என்று பெயர் சூட்டினர். பாலம் கட்டும் போதே பாலத்தின்

ஆயுள் காலம் 100

ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் அதற்கு பின் பெரியளவில்

பாலத்தை பராமரிக்கவில்லை. பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள், நடைபாதை, தார்ச்சாலை சேதமடைந்துவிட்டது.

மழை பெய்தால் மழைநீர் வழிந்து செல்ல முடியாத அளவிற்கு வடிகால் குழிகளில் மண் அடைத்து உள்ளது. இதனால் பாலம் பலமில்லாமல் உள்ளது. பக்கவாட்டு சுவர்களில் செடிகள் வளர்ந்து மரமாகி வேர்கள் ஊடுருவிவிட்டன.

கோரிப்பாளையத்தில் புதிய பாலம் அமைக்கும் திட்டத்துடன் இந்த பாலத்தையும் பலப்படுத்த திட்ட

மிட்டுள்ளனர். ஆனால், அந்த திட்டத்தை செயல்

படுத்தும் முன் பலப்

படுத்த முடியாத அளவிற்கு பாலம் சேதமுற்றுள்ளது.

பாலத்தின் துாண்

ஒன்றின் கீழே தண்ணீர் வழிந்து ஓடும் படிக்கட்டு பகுதியில் தரைதளம் முற்றிலும் உடைந்துவிட்டது. உடைந்த பகுதியில் தண்ணீர் செல்வதால் துாணின் அடித்தளம் அரிக்கப்பட்டு அஸ்திவாரம் சிதையும் நிலையில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அக்கறை காட்டினால் மட்டுமே பாலத்தை காப்பாற்ற முடியும்.

பொறியாளர் ராம

கிருஷ்ணன் கூறியதாவது:

ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது அலுவலகம், குடியிருப்பு தெப்பக்குளம் பகுதியில் இருந்தது. குடியிருப்பை தல்லாகுளம் பகுதிக்கு மாற்றிய போது தான் இப்பாலம் கட்டினர். பாலம் 'ஆர்ச்' வடிவில் கட்டப்பட்டுள்ளதால் எந்த காலத்திலும் இடிந்து விழ வாய்ப்பு இல்லை.

அதே போல் உலோ

கங்கள் இல்லாத காலத்தில் பாலம் கட்டப்பட்டதால் வாகனங்களில் பாரத்தை தாங்க 'கீ ஸ்டோன்' தொழில்நுட்பம் அதாவது 'ஆப்பு' போல கற்களை பயன்படுத்தியுள்ளனர். இவ்வமைப்பை கலெக்டர் அலுவலக கட்டடத்தில் பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் சில பகுதி

களை பழமை மாறாமல் மறு புனரமைப்பு செய்தனர். என்ன தான் உறுதி

யான கட்டுமானமாக இருந்தாலும் முறையாக பராமரிக்கவில்லை என்றால்

பாலம் பலம் இழக்கும்.

எனவே பாலத்தில் உள்ள செடிகளை அகற்றி, செல்லுார் ரயில்வே

பாலத்தின் மையப் பகுதியில் பூசியிருப்பதை போல 'வாட்டர் புரூப் பெயின்ட்' பூசினால் ஏ.வி.,பாலம் மதுரையின் வரலாற்று

சின்னமாக நீடிக்கும்

என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X