| ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஆய்வு அதிகாரிகள் நியமனம் Dinamalar
ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஆய்வு அதிகாரிகள் நியமனம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:49

திருப்பூர்:ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஓய்ந்துவிட்டதால், கிராமப்புற மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்ய, துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலர் உத்தரவுப்படி, கிராமப்புற மக்களின் வசதிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களின் அடிப்படை வசதிகளை கண்காணித்து, வசதிகளை மேம்படுத்த, துணை கலெக்டர் நிலை அலுவலர்கள், ஆய்வு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒன்று அல்லது இரண்டு ஒன்றியங்களுக்கு, ஒரு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில், ஆய்வு அதிகாரிகளாக, ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன் குமார், திருப்பூர் மற்றும் பொங்கலுார் ஒன்றியங்களின் ஆய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் மற்றும் மூலனுாருக்கு, சப்-கலெக்டர் கிரேஸ்

பச்சாவு; உடுமலை மற்றும் குடிமங்கலத்துக்கு, ஆர்.டி.ஓ., அசோகன்; காங்கயம் மற்றும் வெள்ளகோவிலுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாபு ராபர்ட்;

பல்லடத்துக்கு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) ராகவேந்திரன்; அவிநாசிக்கு, உதவி கமிஷனர் (கலால்) சக்திவேல்; மடத்துக்குளத்துக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தாதேவி; குண்டடத்துக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன்; ஊத்துக்குளிக்கு, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள ஆய்வு அதிகாரிகள், அந்தந்த ஒன்றியங்களில் உள்ள, ஊராட்சி பகுதிகளில் ஆய்வு நடத்தி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கலெக்டருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X