| ''ஆசிரியரை மறக்க முடியாது'ஆசிரியரை மறக்க முடியாது' Dinamalar
''ஆசிரியரை மறக்க முடியாது'ஆசிரியரை மறக்க முடியாது'
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:52

திருப்பூர்:''என்னை செதுக்கிய ஆசிரியர்களை என்றும் என்னால் மறக்க முடியாது,'' என, ஆசிய விளையாட்டில், வெள்ளி பதக்கம் வென்ற தருண் பேசினார்.

திருப்பூர் சென்சுரி பவுண்டேசன் பள்ளியில், தருண் அய்யாசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சக்திதேவி, இயக்குனர் மனோகரன், பள்ளி முதல்வர் ரேணுகா ஆகியோர் தலைமை வகித்தனர். பயிற்சியாளர் அழகேசன் முன்னிலை வகித்தார்.

தருண் பேசுகையில்,'' என்னை செதுக்கி உருவாக்கிய என் ஆசிரியர்களை என்னால் மறக்க முடியாது. விளையாட்டிலும் சரி, கல்வியிலும் சரி என்னை தோற்றுவித்தவர்களுக்கு என்றொன்றும் கடமை பட்டிருக்கிறேன். உழைப்பை நம்பினேன்; வெற்றி கிடைத்தது,''

என்றார்.

தருண் தாயார் பூங்கொடி, கையால் தருணுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. தருணுக்கு எழுதிய கவிதை, கட்டுரை, வாழ்த்துமடல்களுக்கு பள்ளி மாணவர்கள் அரங்கில் வாசித்தனர். தன்னுடன் படித்த முன்னாள் மாணவர்களுடன் தருண் உரையாடி மகிழ்ந்தார். பல மாணவர்களுடன், அவருடன், 'செல்பி' எடுத்து கொண்டனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X