பஸ் ஸ்டாண்டுல இருந்த இருக்கைய காணோம் புலம்பியபடி தரையில் அமரும் பயணிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
07:01

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்காரும் இருக்கைகள் சேதமுற்று இருப்பதால், தரையில் உட்காரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து ராமேஸ்வரம், திருச்செந்துார், சாயல்குடி, விருதுநகர், துாத்துக்குடி மற்றும் நுாற்றுக்கணக்கான கிராமங்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் ஸ்டாண்டில் போதுமான வசதிகள் இல்லை. முக்கியமாக பயணிகள் உட்காரும் இருக்கைகள் சேதமடைந்துள்ளது.பல வருடங்களாக பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லாமல், கம்பி மட்டும் தான் உள்ளது. இதனால் பயணிகள் தரையில் உட்கார வேண்டிய நிலையில் உள்ளனர். வயதானவர்கள் உட்கார இருக்கைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பல மணிநேரம் நின்று கொண்டிருப்பதால், கால் வலி எடுப்பதாக கூறுகின்றனர்.
பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணிகள் செய்ய நகராட்சி ரூ.2 கோடி நிதி ஒதுக்கி, முதலில் பழைய பஸ் ஸ்டாண்டில் பணிகள் செய்தது. அங்கு பணிகள் முடிந்த பின்னரும், புதிய பஸ் ஸ்டாண்டில் பணிகள் செய்யவில்லை. பஸ் ஸ்டாண்டடின் மேற்கூரை இடிந்து உள்ளது. குடிநீர் வசதி இல்லை. புதிய பஸ் ஸ்டாண்டில் போதுமான வசதிகளை செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X