கூலி வேலைக்கு செல்லும் மருத்துவ மாணவி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
07:08

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக, விடுமுறை நாட்களில், கூலி வேலைக்கு செல்கிறார்.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணி மல்லிகா தம்பதியின் மகள் கனிமொழி, 21. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், 2014ம் ஆண்டு, ப்ளஸ் 2 தேர்வில், 1,127 மதிப்பெண் பெற்றார். 191.05, 'கட் ஆப்' பெற்ற கனிமொழிக்கு, இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு கிடைத்தது. டாக்டர் கனவில் இருந்த கனிமொழிக்கு படிப்பை தொடர முடியாமல், வறுமை தடைக் கல்லானது. கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாமல் திணறினார். கனிமொழியின் நிலையை அறிந்த, பெரம்பலூரின் அப்போதைய கலெக்டர் தாரேஷ்அஹமது, சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கி உதவினார். மாணவியின் தந்தை பிச்சைமணி, கூலி வேலைக்கு சென்றும், கடன் வாங்கியும், மகளின் படிப்புக்கு, கட்டணம் செலுத்தி வருகிறார். இருப்பினும், மாணவி கனிமொழி, விடுமுறை நாட்களில், விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருகிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், மருத்துவ படிப்பை தொடர முடியுமா... என்ற கவலை, கனிமொழிக்கு ஏற்பட்டுள்ளது.


அவர் கூறியதாவது: வரும் பிப்ரவரி மாதம், இறுதித் தேர்வு நடக்க உள்ள நிலையில், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை செலுத்த முடியாமல் சிரமப்படுகிறேன். எப்படியாவது டாக்டராகி, மக்களுக்கு சேவை ஆற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். கனிமொழியின் மருத்துவ கனவுக்கு உதவ விரும்புவோர், 95247 05879 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
12-செப்-201817:34:44 IST Report Abuse
Thanu Srinivasan விளையாட்டுகளில் அழுகுணி ஆட்டம் என்று சொல்வார்கள். அது போன்ற ஒரு அழுகுணி நாடகத்தை இந்த பெரம்பலூர் மாணவி அரங்கேற்றியுள்ளார். தாழ்த்தபட்டோர் என்று கூறி கூறியே இவர்களுக்கும் பிற கோட்டா(ன்) பிரிவினர்களும் எல்லா அரசு சலுகைகளையும் வரம்பின்றி அனுபவித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் என்று தப்பாட்டமாக கூறப்படுவோரின் மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. அரசு கோட்டாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் அவர்கள் படித்தாலும் அப்போதும், ஹாஸ்டல் மற்றும் உணவு செலவுகளையும் அரசே ஏற்கிறது.அதன்பிறகும் இவருக்கு என்ன உதவி வேண்டியுள்ளது. வேண்டும் என்றே முற்படுத்தபட்ட சமூகத்தினருக்கு ஒரு சலுகைகளையோ உதவியோ செய்யாமல் கோட்டா பிரிவினருக்கே மீண்டும் மீண்டும் உதவி செய்ய வேண்டுமா? எனது மருமகள் 198. 5 கட் ஆஃப் எடுத்தும், அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. எதில், மருத்துவ படிப்பிற்கோ, பொறியியல் படிப்பிற்கோ அல்ல, கேவலம் ஆசிரியர் படிப்பிற்கு வருங்காலத்தில் இப்படி நீலித்தனமான, எமோஷனல் நாடகங்களை வெளயிடாமலுருக்க தினமலரை கோருகிறேன். எஸ். ட்டி. ஸ்ரீநிவாசன் சென்னை 73, 9445694259
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X