22,500 தனிப்பட்டா வழங்காமல் முடக்கம்: வருவாய்த்துறையில் பெரும் பின்னடைவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
07:50

சேலம்: நில அளவையர் பற்றாக்குறை, கூடுதல் பணிச்சுமையால், மாவட்டத்தில், 22 ஆயிரத்து, 500 தனிப்பட்டா வழங்காமல் முடங்கிக்கிடப்பதால், வருவாய்த்துறையில், பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில், வருவாய்துறை நிர்வாகத்தில், 44 குறுவட்டங்களில்(பிர்கா), தலா ஒருவர் வீதம், 44 நில அளவையருக்கு பதில், 33 பேர் பணியில் உள்ளனர். வீரகனூர், ஆத்தூர், மல்லியக்கரை, காட்டுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, காரிப்பட்டி, பேளூர், பாலமலை, ஏற்காட்டில் இரு பிர்கா என, 11 நில அளவையர் பணியிடம், பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. தவிர, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட, 16 நில அளவையர்கள், திருப்பூர், கோத்தகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். அந்த இடங்களில், கையில் வரையப்படும்(மேனுவல்) நில வரைபடங்களை, சேட்டிலைட்டில் பதிவதற்கான திட்டப்பணிகளில், அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வருவாய்த்துறை சார்ந்த பணி, மாவட்டத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.


விண்ணப்பித்துள்ள, 22 ஆயிரத்து, 500 பேருக்கு, தனிப்பட்டா கிடைக்காமல் முடங்கிக்கிடக்கிறது. சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவின்போது, உட்பிரிவு கட்டணமாக, தலா, 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு, நிலம் வாங்குவோருக்கு, தனிப்பட்டா விபரம், இணையதளம் வழியாக, சம்பந்தப்பட்ட தாசில்தார், லாக் - இன்னில்(கணக்கில்), பதிவேற்றமாகி விடுகிறது. இதுதொடர்பாக, நிலம் விற்றவர், வாங்கியவர், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,வுக்கு, தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி விசாரித்து, அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவரிடமும் விசாரித்து, தனி அறிக்கை தயாரித்து, தனிப்பட்டா வழங்க, தாசில்தாருக்கு பரிந்துரைக்க வேண்டியது நில அளவையர் கடமை. ஆனால், பற்றாக்குறையால் அப்பணி முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுகுறித்து, சில நில அளவையர்கள் கூறியதாவது: சேலத்தில், மேம்பால பணி, பசுமைவழிச்சாலை, சேலம் - மேட்டூர் ரயில்வே பாதை விரிவாக்கம், காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கம் என, பிரதான பணிகளில் நில அளவையர், முழுமையாக ஈடுபட்டுள்ளதால், வழக்கமான பணிகள் ஸ்தம்பித்துள்ளன. மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட, 16 பேர், இதர மாவட்ட பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதால், இந்த நிலை தொடர்கிறது. முதல்வர், சொந்த மாவட்டத்தில், இந்த பாதிப்பு. பற்றாக்குறையால், அதிக பணிச்சுமைக்கு ஆளாகி, மன உளைச்சலில் உள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில நில அளவையர் தவறு செய்கின்றனர். குறிப்பாக, சேலம் மேற்கு தாலூகாவில், புகார்கள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X