விநாயகர் சிலைகளுக்கு கெடுபிடி: நஷ்டத்தால் தயாரிப்பாளர்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
07:55

வீரபாண்டி: விநாயகர் சிலைகள் தயாரிக்க, வைத்து வழிபட, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சிலை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆட்டையாம்பட்டியில், பல்வேறு காகித கூழ் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சங்கர், 38, கூறியதாவது: நான்கு தலைமுறையாக, விநாயகர் சிலைகளை தயாரித்து விற்று வருகிறோம். தொடக்கத்தில், களிமண்ணில் சிறு சிலைகள் செய்து வந்த நிலையில், தந்தை, மும்பையில், பிரமாண்ட சிலைகள் செய்ய கற்றுக்கொண்டு, இங்கு வந்து பெரிய காகித கூழ் சிலைகளை அறிமுகப்படுத்தினார். சதுர்த்தி விழா, சீசனாக இருந்தாலும், ஆண்டு முழுவதும், சிலை தயாரிப்பு வேலை இருக்கும். நடப்பாண்டு, தமிழக அரசு, சிலைகள், 10 அடிக்கும் குறைவான உயரத்தில் தான் இருக்க வேண்டும். அதிகபட்ச விலை, 10 ஆயிரம் ரூபாயை தாண்டக்கூடாது. 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்'(தண்ணீர் உறிஞ்சாத மாவு பொருள்) சிலைகளுக்கு தடை, இயற்கை வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். சிலைகளை வைத்து வழிபட, பலதுறைகளில் அனுமதி என, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


கடந்தாண்டுகளில், 15 அடி உயர சிலைகளை தயாரித்து விற்றோம். அதற்கான அச்சுகளை, லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கி, மூலப்பொருட்களை முதலீடு செய்து, சிலை தயாரித்து வைத்திருந்தோம். ஆனால், விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில், கட்டுப்பாடு இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டுவதால், சிலை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இங்கு, அரை அடி முதல், 10 அடி உயரம் வரை, 100 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வளவு சிரமங்களுக்கு இடையே, நடப்பாண்டு புதுவரவாக திருப்பதி வெங்கடாஜலபதி கணபதி, காமாட்சி கணபதி, ஷீரடி சாய்பாபா கணபதி, சிவன் படகோட்டி கணபதி, கஜ வாகன கணபதி, மகாலட்சுமி, சிவசக்தி கணபதி உள்ளிட்ட பல மாடல்களில், விநாயகர் சிலைகளை தயாரித்து விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


126 சிலைகளுக்கு அனுமதி: விநாயகர் சதுர்த்தி விழா, நாளை கொண்டாடப்படவுள்ளது. அதை முன்னிட்டு, இடைப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி பகுதிகளில், ஏராளமானோர், விநாயகர் சிலைகள் வைக்க, அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளித்தனர். அதில், இடைப்பாடியில், 60, கொங்கணாபுரத்தில், 28, பூலாம்பட்டியில், 38 என, 126 விநாயகர் சிலைகளுக்கு, போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
12-செப்-201810:42:05 IST Report Abuse
SENTHIL NATHAN விநாயகர் சிலை தயாரிப்பவர்கள் சுற்றுப்புற சூழலை/ அதன் நலனை மனதில் கொண்டு சிலைகளை தயாரிக்க வேண்டும்.. சிலைகள் அனைத்தும் நீர் நிலைகளில் தான் கரைக்க படுகின்றன. ரசாயனங்கள் நீரில் கலந்து அதை குடி நீராக உபயோகிப்போரின் நலனை பாதிக்கும்... இதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் வணிக நோக்கில் சிலை செய்பவர்கள் இந்த பொறுப்பினை உணர்ந்துள்ளனரா என்பது தான் மிக பெரிய கேள்வி.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X