'நீட்' தேர்வு பயிற்சிக்கு கடும் எதிர்ப்பு: ஆசிரியர்கள் புறக்கணிப்பு போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
08:24

ஈரோடு: 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் ஆசிரியர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீட் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நேற்று துவங்கியது. ஒன்றரை மணி நேரம் புறக்கணித்த பின்னரே, ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றனர். இதேபோல் ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை, அரை நாள் புறக்கணித்தனர். இன்றும், 14ல் நடக்கும் பயிற்சி வகுப்புக்கு முன்னதாக, புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி கூறியதாவது: நீட் தேர்வுக்காக, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பது, பள்ளி சாரா செயல்பாடு. எங்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 என ஆண்டுதோறும் இரு பொது தேர்வுகளை சந்திக்கிறோம்.மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதோடு அதிக மதிப்பெண் பெற வைக்க, சிறப்பு வகுப்புகளை நடத்துகிறோம். அரசின் நலத்திட்ட ஒருங்கிணைப்பும் செய்ய வேண்டி உள்ளது. தற்போதுள்ள பாடத்திட்டமே போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தான் உள்ளது. தனியாக 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த, அரசு நிர்ப்பந்திக்கிறது. வகுப்பு விடுமுறை நாட்களில் நடத்த அறிவுறுத்தியுள்ளது. இதனால் எங்கள் கற்றல், கற்பித்தல் திறன் மற்றும் குடும்ப நலன் பாதிக்கிறது. இதுபோன்ற பயிற்சி வகுப்பு, கூட்டங்களில் பங்கேற்றால், வகுப்புகளில் எவ்வாறு பாடம் நடத்த முடியும். அதே வேளையில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பணியிடை பயிற்சி வரவேற்கதக்கது. 'நீட்' தேர்வு மைய பயிற்சியில் இருந்து, எங்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும், புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது. எங்கள் கோரிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம், ஏற்கனவே மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X