அரசு பள்ளிகளுக்கு வெள்ளை அடிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
08:29

ஈரோடு: ''மாநில அளவில், அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும் தைப்பொங்கலுக்குள் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு, வெள்ளை அடிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோட்டில், அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜன., முதல் வாரத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். தாளவாடி அருகேயுள்ள பள்ளியில், கன்னடம் வகுப்பு எடுக்க ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ் வகுப்புக்கு ஆசிரியர் இல்லையென்று, என் கவனத்துக்கு வந்தது. அதுபோன்ற பள்ளிகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப, 7,500 ரூபாய் ஊதியத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், விரைவில், 2,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்கள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வேண்டும், என கோரப்பட்டது. உடனடியாக தொழிலதிபர்கள் சார்பில், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் நிதி கிடைத்துள்ளது. மாநில அளவில், அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும் தைப்பொங்கலுக்குள் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு, வெள்ளை அடிக்கப்படும். அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு, 1,500 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 102 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X