படைப்பாற்றல் போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
08:58

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த, படைப்பாற்றல் போட்டிகளில், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், படைப்பாற்றல், பேச்சாற்றலை வளர்க்கும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியருக்கு, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டுக்கான போட்டிகள், நேற்று நடந்தன. முதல்வர் ஹேமா தலைமை வகித்தார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் சகுந்தலா துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித்துறை விழுப்புரம் மண்டல உதவி இயக்குனர் சத்தியபிரியா மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன. கட்டுரை போட்டிக்கு, 16 தலைப்புகள் வழங்கப்பட்டு, போட்டிகள் நடந்தன. முதல், மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, 10 ஆயிரம், 7,000, 5,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதல் பரிசை பெற்றவர்கள், சென்னையில் நடக்கும் மாநில போட்டிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த போட்டிக்கு, கல்லூரி முதல்வர்(பொ) கீதா தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் உதவி இயக்குனர் கோவிந்தராசு ஒருங்கிணைத்தார். பத்துக்கும் மேற்பட்ட, தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளைச் சேர்ந்த, 30 பேர் பங்கேற்றனர். 16 தலைப்புகளில், பேச்சுப் போட்டி நடந்தது. ஒவ்வொரு போட்டியிலும், முதல் இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.


 

மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X