அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
09:39

வாய்க்கால்களை தூர்வார வேண்டும்: கரூர் அருகே, சின்னகுளத்துப்பாளையம் ரயில்வே கேட் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலை சுத்தம் செய்து, பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால், கால்வாய்களில் மண், குப்பை குவிந்து, கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில், சுகாதாரகேடு மற்றும் தொற்றுநோய் அபாயம் உள்ளதால், வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பையை அள்ளி சுத்தம் செய்ய வேண்டும்.


சாக்கடை கால்வாயில் கருவேல மரங்கள்: கரூர் அருகே, பெரிய குளத்துப்பாளையத்தில், சாக்கடை கால்வாயில், ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் மழை நீர், சாக்கடையில் செல்ல வழியின்றி, பல இடங்களில் தேங்கி நிற்கிறது. மேலும், கருவேல மரங்கள் முளைத்துள்ள கால்வாய் பகுதியில் இருந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வாய்க்காலில் உள்ள கருவேல மரங்களை வெட்ட வேண்டும்.


நிழற்கூடத்தில் இருக்கை இல்லை: கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை அருகே, பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருக்கைகள் போடப்பட்டன. அவை அனைத்தும் உடைந்து விட்டதால், பயணிகள் உட்கார முடியாமல், நீண்ட நேரம் நின்றபடி, பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், முதியோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில், இருக்கை வசதி செய்ய வேண்டும்.


ஆபத்தை ஏற்படுத்தும் மினி டெம்போக்கள்: கரூர் நகர பகுதியில் அதிகளவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மினி டெம்போக்கள் அதிகரித்துள்ளன. ஆனால், டெம்போக்களில் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை ஏற்றிச் செல்லும்போது, சிவப்பு கொடி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்வது இல்லை. இதனால், டெம்போக்களுக்கு பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர்.


சின்டெக்ஸ் தொட்டி சேதமானதால் அவதி: கரூர் அருகே ராயனூரில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில், தற்போது, சின்டெக்ஸ் தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தொட்டியில் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், போர்வெல் குழாயும் பழுதடைந்துள்ளது. குழாயை சீரமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டும்.


 

மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X