'நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும்...': எம்.எல்.ஏ., திருமண கிளைமாக்ஸ்; தொகுதியில் 'திக்திக்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
09:59

பவானிசாகர்: பவானிசாகர் எம்.எல்.ஏ., திருமணம் திட்டமிட்டபடி இன்று நடக்குமா, நடக்காதா? என தொகுதி மக்கள் மத்தியில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 42; இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், செப்.,12ல் (இன்று) திருமணம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் நிச்சயிக்கப்பட்ட பெண், திடீரென மாயமானதால், திருமண விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, அ.தி.மு.க.,வினர் தரப்பில் தீவிர பெண் வேட்டை நடந்தது. இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ.,வோ அவரது தரப்பிலோ, யாரும் வாய் திறக்கவில்லை. இதனால் சந்தேகம், மர்மம், ஆச்சரியம் என பல்வேறு நிலைப்பாடு தொடர்ந்தது. அதேசமயம் திருமணம் நடக்கவுள்ள, பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடர்ந்தது. இதனால் திட்டமிட்டபடி திருமணம் நடக்குமென, ஒரு தரப்பினர் நம்பினர். இத்தனை கேள்விகளுக்கும், ஏதாவது ஒரு விடை கிடைக்கும் நாளாக, இன்று அமைந்துள்ளது. எம்.எல்.ஏ., என்பதால், கட்சியினரை விட, தொகுதி மக்கள் மத்தியில் திருமண கிளைமாக்ஸ், உச்சபட்ச எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.


இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: குறிப்பிட்ட தேதியில், திருமணம் நடத்த, பெண் தேடும் பணியில் ஈடுபட்டோம். அதேசமயம், நெருக்கடியான நிலையில், திருமணம் செய்வதில், எம்.எல்.ஏ.,வுக்கு விருப்பமில்லாத நிலை காணப்பட்டது. அவரை சமாதானம் செய்து கொண்டே பெண் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தோம். உக்கரம், வண்டிபாளையம், பகுதிகளில் பெண் கேட்டு, திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தற்போதைய நிலை இதுதான்! எம்.எல்.ஏ., திருமண விவகாரத்தில், எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல் வரிகளுக்கேற்ப, 'நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும்...' என்ற நிலை கூட ஏற்படலாம். அந்த அடிப்படையில், இந்த செய்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவரது திருமணம் நடந்து முடிந்திருக்க வாய்ப்புள்ளதாக, எம்.எல்.ஏ.,வை நன்கறிந்த பலர் கூறுகின்றனர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X