போலீஸ் உடல் தகுதி திறனாய்வு தேர்வு: மதிப்பெண் பெற மாற்றி யோசித்த இளைஞர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
10:02

சேலம்: போலீஸ் உடல் தகுதி தேர்வில், அதிக மதிப்பெண்களை பெற, இளைஞர்கள், உயரம் தாண்டுதலை தவிர்த்து, நீளம் தாண்டுதலை தேர்வு செய்தனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம், போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் காலியாகவுள்ள, 6,140 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. அதில், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடல் தகுதி தேர்வு, தமிழகத்தின், 15 மையங்களில் கடந்த, 3ல் தொடங்கியது. அதன் முதல் கட்ட தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு, 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதலில், ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற அறிவுறுத்தப்படுகிறது. அதில், நீளம் தாண்டுதலையே, 98 சதவீத இளைஞர்கள் தேர்வு செய்கின்றனர். உயரம் தாண்டுதல் சிரமம் என்பதால், அதை தவிர்க்கின்றனர். கடந்தாண்டு ஜூலையில் தொடங்கிய தேர்வில், தமிழகம் முழுவதும், 110 பேர் மட்டுமே உயரம் தாண்டுதலை தேர்வு செய்து வெற்றி பெற்றனர். இதில், சேலத்தில், 10 இளைஞர்கள் அடங்கும். நடப்பாண்டில் நடந்து வரும் தேர்வில், தமிழகம் முழுவதும் நேற்று வரை, 88 பேர் மட்டுமே உயரம் தாண்டுதலை தேர்வு செய்தனர். சேலம் மையத்தில், நேற்று நடந்த தேர்வுக்கு, 542 பேர் பங்கேற்ற நிலையில், ஆறு பேர் உயரம் தாண்ட முன் வந்தனர். அதில், நான்கு பேர், முன்னாள் ராணுவ வீரர்கள், இருவர் மட்டுமே விளையாட்டு வீரர்கள். அவர்கள், வெற்றியும் பெற்றனர். மதிப்பெண் பெற, இளைஞர்கள் உயரம் தாண்டுதலை தவிர்ப்பதால், அகில இந்திய அளவில், போலீசாரிடையே நடக்கும் தடகள போட்டிகளில், தமிழக போலீஸ் அணி சாதிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், போலீஸ் தேர்வில் மாற்றங்களை கொண்டு வர, அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X