சாலையில், '304 ஏ' குறியீடு எழுதி தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
20:13

சென்னை: சாலை விபத்து நடந்த பகுதியில், '304 ஏ' என குறியீடு எழுதப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வழக்குப்பதிவு, அபராதம், வாகனம் பறிமுதல், உரிமம் ரத்து என, போலீசார் நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன பெருக்கம், சாலை கட்டமைப்பு போதாமை, அதிவேக பயணம் உள்ளிட்ட காரணங்களால் விபத்து நடப்பது அதிகரித்து வருகிறது. சென்னையில், ஓராண்டில், 700 முதல், 1,000 பேர் வரை, சாலை விபத்துகளில் சிக்கி, பலியாகின்றனர். விபத்தை தடுக்க, 'ஹெல்மெட், சீட் பெல்ட்' உள்ளிட்டவை அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, விபத்து மற்றும் பலி நடந்த இடத்தில், '304 ஏ' குறியீடு எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், போலீசார் இறங்கி உள்ளனர். மேலும், விபத்து பகுதிகள் குறித்த விபரத்தை, போலீஸ் உயரதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கும் வகையில், இந்த குறியீடு வரையப்பட்டு வருகிறது.


போக்குவரத்து போலீசார் கூறியதாவது: விபத்தில் சிக்கி கடும் பாதிப்பிற்கு உள்ளானோரை அழைத்து வந்து, வாகன ஓட்டிகளிடம் பேச வைப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, '304 ஏ' குறியீடு வரையும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள், விபத்து நடந்த இடத்தை அறியும் வகையில், இந்த குறியீடு வரையப்படுகிறது. இதன் மூலம், அந்த இடத்தில் கவனமாக பயணிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகள் குறித்த விபரம், தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கும் வகையில், போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, விபத்து பகுதிகளில் வேறு என்ன வகையான நடவடிக்கை எடுக்கலாம் என, அவர்கள் முடிவு செய்வர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X