| சாலையில், '304 ஏ' குறியீடு எழுதி தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிப்பு Dinamalar
சாலையில், '304 ஏ' குறியீடு எழுதி தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிப்பு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
23:49

சென்னை:சாலை விபத்து நடந்த பகுதியில், '304 ஏ' என குறியீடு எழுதப்பட்டு வருகிறது.சாலை விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வழக்குப்பதிவு, அபராதம், வாகனம் பறிமுதல், உரிமம் ரத்து என, போலீசார் நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன பெருக்கம், சாலை கட்டமைப்பு போதாமை, அதிவேக பயணம் உள்ளிட்ட காரணங்களால் விபத்து நடப்பது அதிகரித்து வருகிறது.


சென்னையில், ஓராண்டில், 700 முதல், 1,000 பேர் வரை, சாலை விபத்துகளில் சிக்கி, பலியாகின்றனர்.விபத்தை தடுக்க, 'ஹெல்மெட், சீட் பெல்ட்' உள்ளிட்டவை அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, விபத்து மற்றும் பலி நடந்த இடத்தில், '304 ஏ' குறியீடு எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், போலீசார் இறங்கி உள்ளனர்.


மேலும், விபத்து பகுதிகள் குறித்த விபரத்தை, போலீஸ் உயரதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கும் வகையில், இந்த குறியீடு வரையப்பட்டு வருகிறது.


போக்குவரத்து போலீசார் கூறியதாவது:விபத்தில் சிக்கி கடும் பாதிப்பிற்கு உள்ளானோரை அழைத்து வந்து, வாகன ஓட்டிகளிடம் பேச வைப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, '304 ஏ' குறியீடு வரையும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள், விபத்து நடந்த இடத்தை அறியும் வகையில், இந்த குறியீடு வரையப்படுகிறது.


இதன் மூலம், அந்த இடத்தில் கவனமாக பயணிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.
அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகள் குறித்த விபரம், தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கும் வகையில், போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, விபத்து பகுதிகளில் வேறு என்ன வகையான நடவடிக்கை எடுக்கலாம் என, அவர்கள் முடிவு செய்வர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X