| பல்கலை விளையாட்டுப் போட்டி மாருதி கல்லூரி அணி வெற்றி Dinamalar
பல்கலை விளையாட்டுப் போட்டி மாருதி கல்லூரி அணி வெற்றி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
23:51

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில் உள்ள மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை கல்லுாரிகளுக்கான ஹாக்கி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போட்டிகள் நடந்தன.

இப்போட்டிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி, சென்னை தமிழ்நாடு விளையாட்டுப்பல்கலை., நாமக்கல் செல்வம் உடற்கல்வியியல் கல்லுாரி, திருநெல்வேலி புனித ஜான்ஸ் கல்லுாரி, தத்தனுார் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லுாரி, போளூர் ரேணுகாம்பாள் உடற்கல்வியியல் கல்லுாரி உள்ளிட்ட ஏழு கல்லுாரிகளை, சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஹாக்கி போட்டியில், முதல் மூன்று இடங்களை முறையே, சென்னை விளையாட்டுப்பல்கலை அணி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., அணி, கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி அணிகள் பெற்றன.

டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை, முறையே கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி அணி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., போளூர் ஸ்ரீ ரேணுகாம்பாள் உடற்கல்வியியல் கல்லுாரி அணிகள் பெற்றன.

டென்னிஸ் போட்டியில், முதல் மூன்று இடங்களை முறையே, கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி அணி, தத்தனுார் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லுாரி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி அணிகள் பெற்றன.

பரிசளிப்பு விழாவில் மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சாய்குமார், விளையாட்டு பல்கலை., போட்டிகளின் செயலாளர் ரஜினிக்குமார், இணை பேராசிரியர் ஜெயபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X