| வலுவிழக்கும் அரசமரம் கவனிக்குமா மாநகராட்சி? Dinamalar
வலுவிழக்கும் அரசமரம் கவனிக்குமா மாநகராட்சி?
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:09

கோட்டூர்புரம்:விபத்தை தடுத்து, நிழலாக இருக்கும் அரச மரத்தின் வேர் பகுதி வலுவிழந்து வருவதால், சுற்றி கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும் என, கோட்டூர்புரம் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அடையாறு மண்டலம், 172வது வார்டு, கோட்டூர் கார்டன், 4வது பிரதான சாலை மற்றும், 4வது குறுக்கு தெரு மைய பகுதியில், 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அரச மரம் உள்ளது.
மூன்று சாலைகள் சந்திக்கும் மைய பகுதியில் நிற்பதால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி, நிழலும் கொடுக்கிறது.


மரம், சாலை மட்டத்தில் இருந்து, வேர் பிடிப்புடன் வளர்கிறது. மரத்தை பலப்படுத்த, வளைவாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், மரத்தை வெட்ட சிலர் முயன்ற போது, அருகில் உள்ள, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பகுதிமக்கள் தடுத்தனர். தற்போதும், அவர்கள் தான், மரத்தை பாதுகாத்து வருகின்றனர்.


தற்போது, கனரக வாகனங்களால், வேர் பகுதியோடு சேர்ந்த கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. வேர் நீளமாக வளர்ந்து வருவதால், கட்டமைப்பில் விரிசல் விழுந்துள்ளது. பலத்த காற்றடித்தால், மரம் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு அடி நகர்த்தி, கட்டமைப்பை விரிவுபடுத்தினால், வேர் பகுதி வலுவடையும். இதற்கான நடவடிக்கையை, மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X