| கோவில் நிலங்களில், 'மல்டி லெவல் பார்க்கிங்' ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் புதிய திட்டம் Dinamalar
கோவில் நிலங்களில், 'மல்டி லெவல் பார்க்கிங்' ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் புதிய திட்டம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:12

சென்னையில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு புதிய தீர்வாக, கோவில்களுக்கு நிலங்களில், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் கட்டுவதற்கான புதிய திட்டத்தை, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனம் உருவாக்கி உள்ளது.


சென்னையில், நாளுக்குநாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப, சாலை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், பிரதான பகுதி சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் நெரிசலால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.


இதனால், தி. நகர், பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை கட்டுவதற்கு, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. ஆனால், சில நடைமுறை சிக்கல்களால், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், சென்னையில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள, முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது.சென்னையில், பிரதான பகுதிகளில், கோவில்களுக்கு சொந்தமாக உள்ள காலி நிலங்களில், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத் துறையிடம் பேச்சு நடத்தி, காலி நிலங்களை பயன்படுத்த அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக, அரசு மற்றும் தனியார் முதலீட்டில், பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.


- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X