| கோவில்களில் விழா Dinamalar
கோவில்களில் விழா
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:36

சூலுார்:கருமத்தம்பட்டி புதுார் சித்தி விநாயகர் கோவில் பழமையானது. இதன் இரண்டாம் ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று அதிகாலை கணபதி ேஹாமம் நடந்தது. பல வகை மூலிகை திரவியங்கள், பழங்களால் ேஹாமம் மற்றும் பூர்ணஹூதி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, சித்தி விநாயகருக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷகங்கள் செய்விக்கப்பட்டன. அலங்கார பூஜை, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கருமத்தம்பட்டி புதுார் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.

செல்லம்பம்பாளையம்:கணியூர் கிராமம், செல்லப்பம்பாளையத்தில் தேவாங்கர் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவீரமார்த்தி அகோர வீரபத்திர சுவாமி கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. செல்லப்பம்பாளையம் மடமனையை சேர்ந்த பர்வத மகரிஷி கோத்திரம், கஞ்சுலிகுடுதார் குலதெய்வம், இக்கோவில். நேற்று முன்தினம் முதல்கால பூஜை, கோபுர கலச ஸ்தாபனம், மூன்றாம்கால யாகம், நான்காம்கால யாகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

சோமனுார் அருகே உள்ள குமாரபாளையம் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 18ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் இன்று காலை, 11:00 முதல், மதியம், 12.30 மணிக்குள் நடக்க உள்ளது.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X