| சிறுமி பலாத்காரம் இறுதி அறிக்கை தாக்கல் Dinamalar
சிறுமி பலாத்காரம் இறுதி அறிக்கை தாக்கல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:43

சென்னை:சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்த காமுகன்கள், 17 பேர் மீதான வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சென்னை, அயனாவரத்தில் உள்ள, பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, செவித்திறன் குறைபாடுடைய, 12 வயது சிறுமியை, காவலாளி, எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட, 17 பேர், ஏழு மாதங்களாக, பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்துள்ளனர்.
இவர்களை, அயனாவரம் மகளிர் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு செய்தால், துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், மத்திய அரசு, திருத்தம் செய்துள்ள, 'போக்சோ' சட்டமும் பாய்ந்துள்ளது.


இந்நிலையில், அயனாவரம் மகளிர் போலீசார் நேற்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்த வழக்கில், இறுதி அறிக்கையை, மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X