| பயனீர் கல்லூரியில் பாரதியார் நினைவு தினம் Dinamalar
பயனீர் கல்லூரியில் பாரதியார் நினைவு தினம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:44

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லுாரியில், பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

பாரதியாரின், 97வது நினைவு தினத்தையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், பாரதியாரின் திருவுருவம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கல்லுாரி முதல்வர் மகேந்திரன் பேசுகையில்,''பாரதியால் தமிழும், பெண்களும் உயர்வடைந்தனர். அவரது கவிதைகளை அனைவரும் படித்து பயன் பெற

வேண்டும்,'' என்றார்.

என்.ஜி.பி., கலை, அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் பகவதியம்மாள், 'வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் பேசினார். கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு, இசைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆஷா நன்றி கூறினார். பேராசிரியர் சம்பத்குமார் தொகுத்து வழங்கினார்.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X