| மஞ்சக்கம்பையில் குழந்தை திருமணம் நிறுத்தம் Dinamalar
மஞ்சக்கம்பையில் குழந்தை திருமணம் நிறுத்தம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:56

ஊட்டி:ஊட்டி அருகே மஞ்சக்கம்பையில், 17 வயதான இரண்டு பெண்களுக்கு, திருமணம் நடப்பதாக, 'சைல்டுலைன்', 1098க்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சைல்டுலைன் அலுவலர் பிரியா, செல்வி, கங்கா, வைதீஷ்வரன் ஆகியோர் திருமணம் நடக்க இருந்த மஞ்சக்கம்பைக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு, மூர்த்தி - மாரியம்மாள் மற்றும் பழனிசாமி - தனலட்சுமி ஆகியோரது தம்பதியரின் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனே, கொலக்கம்பை போலீசில் சைல்டு லைன் அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் போலீசார் மற்றும் மேலுார் வி.ஏ.ஓ., சசிகுமார் அங்கு சென்று, குழந்தை திருமணம் தடை சட்டத்தை எடுத்து கூறி, சைல்டு லைன் அலுவலர்கள் குழந்தைகளை ஊட்டிக்கு அழைத்து வந்தனர். குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்திய பின், படிப்பை தொடர, அன்னை சத்தியா விடுதியில் சேர்க்கப்பட்டனர்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X