| மெட்ரோ ரயில் தாமதத்தால் அவதி Dinamalar
மெட்ரோ ரயில் தாமதத்தால் அவதி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:56

சென்னை:'சிக்னல்' கோளாறால், மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விமான நிலையம் - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., பரங்கிமலை - சென்ட்ரல் மெட்ரோ ரயில் போக்குவரத்தில், நேற்று முன் தினம் இரவு, 'சிக்னல்' கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.


இந்நிலையில், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - விமான நிலைய பாதை மற்றும் எழும்பூர் நிலையத்தில், சிக்னல் பிரச்னையால் நேற்று, 30 நிமிடங்கள் ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் பாதைகளில், இரண்டு மாதங்களில், ஐந்து முறை கோளாறு ஏற்பட்டுள்ளது.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X