மனுநீதிநாள் கூட்டம்: ரூ.35 லட்சத்தில் நல உதவி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:11

கோத்தகிரி:கோத்தகிரியில் நடந்த மனுநீதிநாள் கூட்டத்தில், 35 லட்சம் ரூபாய் செலவில், 110 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோத்தகிரி எஸ்.கைக்காட்டி அம்மன்நகர் கிராமத்தில், மனுநீதிநாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

அம்மன்நகர் கிராமத்தில், 7 வளர்ச்சி பணிகளுக்காக, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில், 2016 முதல், 2018ம் ஆண்டுவரை, 7.14 கோடி ரூபாய் செலவில், 179 வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற, தகுதியுள்ள பயனாளிகள் உரிய ஆவணங்களை பதிவு செய்யவேண்டும்.

தாயகம் திரும்பியோர் பயன்பெறும் விதமாக, 1000 வீடுகள் கட்டுவதற்கு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 820 வீடுகள் கட்டுவதற்கு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி வந்தவுடன், படிப்படியாக வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில், 100 நாள் வேலை திட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். அப்போதுதான், பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இவ்வாறு, கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவி தொகை, பயிர் கடன், தோட்டக்கலை துறை உதவிகள் என, 110 பயனாளிகளுக்கு, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்த 130 மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதில், எம்.எல்.ஏ., சாந்திராமு, ஆர்.டி.ஓ., பத்ரிநாத், தாசில்தார் ரவிக்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X