| ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் Dinamalar
ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:12

சென்னை:மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை வந்த விமானத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, பயணி ஒருவரின் உடைமைகளுக்குள், 350கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு 10.50லட்சம் ரூபாய்.


இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த நபரை சோதனையிட்ட போது, அவரது உடைமைகளுக்குள் இருந்து, 150 கிராம் தங்க கட்டிகள், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.
அபுதாபியில் இருந்து, நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வந்த விமானத்தில், சோதனையிட்ட போது, பயணி ஒருவரின் உடைமைகளுக்குள் இருந்து, 200கிராம் தங்க நகை, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னையில் இருந்து நேற்று காலை, கோலாலம்பூர் புறப்பட தயாராக இருந்த விமானத்தில், செல்ல வந்த நபர் ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மலேஷியா கரன்சி மற்றும் அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பில், ஐந்து லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X