| காட்டெருமை சண்டை: சமையலறை சேதம் Dinamalar
காட்டெருமை சண்டை: சமையலறை சேதம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:16

குன்னுார்:குன்னுார் பக்காசூரன் மலை டான்டீ குடியிருப்பு பகுதியில் இரு காட்டெருமைகள் சண்டையிட்டதில் தொழிலாளரின் குடியிருப்பு சேதமடைந்தது.

குன்னுார் வனச்சரகம் உலிக்கலுக்கு உட்பட்ட பக்காசூரன் மலை டான்டீ குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தொழிலாளி முத்துவீரன். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் இரு காட்டெருமைகள் சண்டையிட்டுள்ளன.

இரண்டும் ஒன்றை ஒன்று தாக்கிய போது, முத்துவீரனின் குடியிருப்பின் சமையலறை சேதமடைந்தது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து வெளியேறினர்.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி அங்கிருந்து விரட்டினர்.

இது தொடர்பான தகவலின் பேரில், பாரஸ்டர் ராஜ்குமார், கார்டு முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், நஷ்டஈடு வழங்குவதற்காக பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, துாதுார்மட்டம் பகுதியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை, வனத்துறையினர் மீட்டனர்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X