| மகளிருக்கான கால்பந்து போட்டி Dinamalar
மகளிருக்கான கால்பந்து போட்டி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:18

குன்னுார், செப். 13-

மகளிருக்கான கால்பந்து போட்டியில் துானேரி குருகுலம் பள்ளி, நீலகிரி மெட்ரிக் பள்ளிகள் வெற்றி பெற்றன.

நீலகிரி மாவட்ட கல்வித்துறை மற்றும் துானேரி குருகுலம் மெட்ரிக் பள்ளி சார்பில், ஊட்டி குறுவட்ட மகளிருக்கான கால்பந்து போட்டி கேத்தி சி.எஸ்.ஐ., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. போட்டியில், ஊட்டி செயின்ட் தெரேசா, நீலகிரி மெட்ரிக், சாந்தி விஜய், பெத்லகேம், துானேரி அகலார் குருகுலம் மெட்ரிக் பள்ளி, கன்னேரிமந்தனை, மஞ்சூர் அரசு பள்ளிகள் பங்கேற்றன.

அதில், 17 வயதுக்கு உட்பட்ட இறுதி போட்டியில், சாந்தி விஜய் - குருகுலம் பள்ளி அணிகள் மோதின. இரு அணிகளும் திறமையாக விளையாடியதில், 'பெனால்டிக் கிக்' மூலம், 2-1 என்ற கோல் கணக்கில் குருகுலம் அணி வெற்றி பெற்றது. மாணவர் பிரிவில், ஜோசப் பள்ளி, 4-1 என்ற கோல் கணக்கில் சி.எஸ்.ஐ., பள்ளியை வென்றது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் மூன்று பள்ளிகள் பங்கேற்றதில், இறுதி போட்டிக்கு ஊட்டி சாந்தி விஜய் பள்ளியும், நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளியும் மோதின.

பெனால்டிக் மூலம், 5-4 என்ற கோல் கணக்கில் நீலகிரி மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது. மாணவர்களுக்கான போட்டியில், 5-3 என்ற கோல் கணக்கில் ஜோசப் பள்ளி, சேக்ரர்ட்ஹார்ட் பள்ளியை வென்றது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் மற்றும் குருகுலம் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X