| பேருந்து நிலையம், குளம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க நகராட்சிகளின் ஆணையர் அறிவுறுத்தல் Dinamalar
பேருந்து நிலையம், குளம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க நகராட்சிகளின் ஆணையர் அறிவுறுத்தல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:28

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், புதிய பேருந்து நிலையம், பசுமை உரக் குடில் மற்றும் நல்லதண்ணீர்குளம் சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்கி, துரித வேகத்தில் முடிக்க வேண்டும் என, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் என, அறிவுறுத்தியுள்ளார்.


திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து
மக்கும், மக்கா குப்பை என, தனித்தனியாக பிரித்து உரம் தயாரிப்பதற்கு, பெரியார் நகரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உரக்குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அதே போல், திருத்தணி - அரக்கோணம் சாலை, அரசு போக்குவரத்து பணிமனை அருகில், 4.50 ஏக்கரில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.


மேலும், திருத்தணி, காந்தி நகர், நல்லதண்ணீர்குளத்தை, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், துார் வாரி சீரமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் துவக்கப்பட உள்ளன.இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ், செங்கல்பட்டு மண்டல நிர்வாக
இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன் ஆகியோர், மூன்று இடங்களை
பார்வையிட்டனர்.


பின், சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என, நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அப்போது, திருத்தணி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தங்கராஜ், நகராட்சி பொறியாளர் விஜய்ராஜா காமராஜர், நகரமைப்பு ஆய்வாளர், தயாநிதி மற்றும் நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் நீலநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


 

மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X