| தேயிலை தோட்டங்களுக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் Dinamalar
தேயிலை தோட்டங்களுக்கு ரூ.1.38 லட்சம் அபராதம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:28

ஊட்டி:கோத்தகிரி பகுதியில் உள்ள சில தேயிலை தோட்ட நிறுவனங்களுக்கு, 1.38 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊட்டி, தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) கோபால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோத்தகிரி பகுதியில் உள்ள டி.எம்.டி., தேயிலை தோட்ட நிறுவனம்; நியூ கார்ஸ்வுட் தோட்ட நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்ட போது, பல்வேறு முரண்பாடுகள் தெரியவந்தன.

இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள, மலை தோட்டங்களின் தலைமை ஆய்வாளர் அனுமதி பெறப்பட்டு, குறிப்பிட்ட தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், வேலையளிப்பவர்கள் மற்றும் மேலாளர்கள் மீது, கோத்தகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்குகளை, கடந்த, 8ம் தேதி நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை செய்த, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்ரீதர், 'நியூ கார்ஸ்வுட் தேயிலைத் தோட்டம், 'ஏ' மற்றும் 'பி' டிவிஷன்களுக்கு, 1.28 லட்சம் ரூபாய்; டி.எம்.டி., தேயிலை தோட்டம் 'சி' டிவிஷனுக்கு, 10 ஆயிரம் ரூபாய்' என, மொத்தம், 1.38 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இவ்வாறு கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X