| ஜி.டி.ஆர்., பள்ளி மாணவர்களுக்கு விருது Dinamalar
ஜி.டி.ஆர்., பள்ளி மாணவர்களுக்கு விருது
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:32

கோத்தகிரி:கோத்தகிரி குஞ்சப்பணை அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் மூவருக்கு, காமராஜர் விருது கிடைத்துள்ளது.

கோத்தகிரி குஞ்சப்பணை ஆதிவாசி கிராமத்தில், உண்டு உறைவிடப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், மாமரம், கோழிக்கரை, செம்மனாரை, மேல் கூப்பு, கீழ் கூப்பு, கரிக்கையூர் மற்றும் தட்டப்பள்ளம் உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர்

தங்கி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி, 1953ல் துவக்கப்பட்டு, 1996ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இங்கு, 207 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் வழி கல்வியில் பயின்று தேர்ச்சி பெற்று, கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில்,

காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, குஞ்சப்பணை அரசு உண்டு உறைவிடப்பள்ளியில், பிளஸ்-2 பயின்றுவரும் மாணவர்கள், மாரிமுத்து, ஜீவானந்தம் மற்றும் 10ம் வகுப்பு பயிலும் கோகுல்சஞ்சய் ஆகிய மாணவர்கள் காமராஜர் விருதுபெற தேர்வு செய்யப்பட்டு, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விருது வழங்கினார்.

நீலகிரியில், இதுவரை இல்லாத வகையில், ஒரே பள்ளியில்; அதுவும் உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும், மூன்று மாணவர்களுக்கு விருது கிடைத்துள்ளது, சுற்றுலா மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

விருதுபெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் விணுதாஸ் மற்றும் வகுப்பாசிரியர்

கஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X