| கால்வாயில், 'பிளாஸ்டிக்' கழிவு; சுற்றுச்சூழல் பாதிப்பு Dinamalar
கால்வாயில், 'பிளாஸ்டிக்' கழிவு; சுற்றுச்சூழல் பாதிப்பு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:33

ஊட்டி:ஊட்டி கோடப்பமந்து கால்வாயில், 'பிளாஸ்டிக்' கழிவுகள் நிறைந்து காணப்படுவதால், தண்ணீர் தேங்கி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி கோடப்பமந்தில் இருந்து வரும் கழிவுநீர், சேரிங்கிராஸ், மார்க்கெட், பஸ் நிலையம் வழியாக, படகு இல்ல ஏரியில் கலக்கிறது.

குடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியேறும் குப்பை குறிப்பாக, பிளாஸ்டிக் பொருட்கள் கால்வாயில் அதிகளவில் வீசப்படுகிறது. இதனால், தண்ணீர் வெளியேற முடியாமல், ஆங்காங்கே தேங்குவதால், கொசு தொல்லையுடன், துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் பாதிக்கப்

படுகிறது.

தவிர, படகு இல்லத்தில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், ஏரி தண்ணீர் மாசடைந்து வருவதுடன், கண்ணாடி கண்டை மீன்கள் இறந்து வருகின்றன. நகராட்சி நிர்வாகம்

அவ்வப்போது, கால்வாயை துார்வாரி ஆழப்படுத்தினாலும், குடியிருப்புகளில் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தேக்கமடைகிறது.

ஊட்டியில், மாவட்ட நிர்வாகத்தின் 'உன்னத உதகை' திட்டம், முழுமையாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான், பிளாஸ்டிக் பொருட்கள் கால்வாயில் வீசப்படுகிறது. எனவே, ஊட்டி நகரை துாய்மையாக வைக்கவும், நீர் ஆதாரங்கள் மாசடையாமல் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X