போலீஸ் டைரி : திருவள்ளூர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:56

பெண்ணிடம் 12 சவரன் நகை வழிப்பறி


எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி. ராஜேந்திரன், நண்பரின் ஹீரோ ஹோண்டா ப்ரோ இருசக்கர வாகனத்தில், கோவிலம்பாக்கம் கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.


வடமதுரை கிராமத்தில் செல்லும் வழியில், பின்னல் யமஹா இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ராஜேஸ்வரி அணிந்திருந்த, 12 சவரன் தாலி சரடை பறித்து கொண்டு சென்றனர்.
அப்போது மர்ம நபர்கள் ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தை உதைத்து, தள்ளி விட்டனர். இதில், நிலை தடுமாறி விழுந்த கணவன், மனைவி இருவரும் காயம் அடைந்தனர்.
இது குறித்து பெரியபாளையம் போலீசில் ராஜேந்திரன் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் பலி


சென்னை பகுதியைச் சேர்ந்தவர் சரத்ராஜ், 23. இவர், வட சென்னை பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், சரத்ராஜ், நண்பர்களுடன், சித்துார் மாவட்டம், புச்சிநாயுடு கண்டிகை அடுத்த, உப்பலமடுகு நீர்வீழ்ச்சியில் குளித்தனர்.
அப்போது, ஆழமான பகுதியில் சரத்ராஜ் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்ததும் புச்சிநாயுடுகண்டிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன், நேற்று காலை, சரத்ராஜின் சடலத்தை மீட்டனர்.


படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி


சித்துார் மாவட்டம், நின்ற கிராமம் அடுத்த, கொப்பேடு காலனியைச் சேர்ந்தவர் ராஜா, 45. இவர், இதே பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று, பணியில் இருந்த போது, கீழ் தளத்தில் ராஜா தலையில் இரும்பு பொருள் ஒன்றை சுமந்து, மேல் மாடிக்கு செல்லும் போது படிக்கட்டில் தவறி விழுந்து மயக்கம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆலையில் இருந்த தொழிலாளர்கள் மீட்டு, புத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ராஜா இறந்தார்.


பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு

சித்துார் மாவட்டம், கங்காதரநெல்லுார் அடுத்த, நெனாட்டம்பள்ளி கிராமத்தில் உள்ள
அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், கிரண்மை, 30. இவர், நேற்று, பள்ளி முடித்தவுடன், சொந்த ஊரான முசலைய்யகாரிப் பள்ளி கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, ராகவரெட்டிப்பள்ளி வளைவில், ஹெல்மெட் அணிந்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென, கிரண்மை வாகனத்தை மறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயினை
பறித்துச் சென்றனர்.


அப்போது, கிரண்மை தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, அவ்வழியாக சென்றவர்கள், ஆசிரியையை மீட்டு, சித்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கங்காதரநெல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X