பழங்குடியினரை தாக்கியதாக போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 செப்
2018
02:08
பதிவு செய்த நாள்
செப் 13,2018 02:03

ஆனைமலை:ஆனைமலையிலுள்ள, பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு, பழங்குடியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியாறு காப்புக்காடு பகுதியில், கடந்த, 6ம் தேதி, தலை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், காண்டூர் கால்வாயினுள் இறந்து கிடந்த சிறுத்தையை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில், 'சிறுத்தை வேட்டையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ளுமாறு,' வனத்துறையினர் மிரட்டுவதாக, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பழங்குடியினர் புகார் மனு கொடுத்தனர்.

வனத்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக, நேற்று காலை பந்தக்காலம்மன்பதியைச் சேர்ந்த, முருகன், 36, கனகராஜ், 27, குமார், 34 மற்றும் அருண், 19, ஆகிய நான்கு பேர் வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

அதன்பின், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர், ஆனைமலையிலுள்ள பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதியம், 2:20 மணிக்கு துவங்கிய முற்றுகை போராட்டம் இரவு 7:30 மணிக்கு மேல் வரை

நீடித்தது.

வால்பாறை டி.எஸ்.பி., சுப்ரமணியம், ஆனைமலை இன்ஸ்பெக்டர் அம்மாதுரை மற்றும் போலீசார் சமரச பேச்சு நடத்தினர். அதன்பின், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன், சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். அப்போது, ''புகாரில் தெரிவித்துள்ள அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, கள இயக்குனர் உறுதியளித்தார்.

தாசில்தார் செல்வபாண்டி பேசுகையில், ''பிரச்னை குறித்து எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுங்கள். கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, விசாரணை கமிஷன் அமைக்கப்படும். விசாரணை கமிஷன் அறிக்கையின்படி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


யாரையும் அடிக்கவில்லை!

மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் பரமசிவம் கூறுகையில், ''பழங்குடியினர் நான்கு பேரை, ஆழியாறு சோதனைச்சாவடிக்கு அழைத்துச் சென்று வனத்துறையினர் தாக்கியுள்ளனர்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனவர்கள் சரண்யா, பிரபாகரன் மற்றும் முருகேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், ''சிறுத்தையின் தலை, கால்களை துண்டிக்கப்பட்டது குறித்து பழங்குடியினரை அழைத்து விசாரிக்கிறோம். யாரையும் மிரட்டவோ, அடிக்கவோ இல்லை,'' என்றார்.


 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X