போதிய தண்ணீர் இருந்தும் கிடைக்காததால் விவசாயிகள்...கவலை! டெல்டாவில் சம்பா சாகுபடி நெற்பயிர் கருகும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:09

சிதம்பரம்:டெல்டா பகுதியில் நேரடி நெல் விதைப்பு சம்பா சாகுபடி நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.


சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் ஒரு லட்சத்து 10 ஏக்கர் காவிரி ஆறு பாசன வசதி பெறுகிறது. பல ஆண்டுகளாக போதிய பருவ மழை இல்லாமல் டெல்டா வறட்சி ஏற்பட்டு ஒரு போக சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.


இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையில் ஜூலை மாதமே மேட்டூர் அணை நிரம்பி 2.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கொள்ளிடம் ஆறு வழியாக வீணாக கடலுக்குச் சென்றது. கீழணைக்கு கடந்த சில நாட்களாக சராசரியாக 3,000 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது.உபரிநீராக கொள்ளிடத்தில் 800 முதல் 1,000 கன அடி தண்ணீர் வரை திறந்து விடப்பட்டு வருகிறது. இருப்பினும் வடவாற்றில் 1400 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.


இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் டெல்டாவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் விவசாயம் செய்வதா அல்லது நடவு மூலம் விவசாயம் செய்வதா என குழப்பத்தில் இருந்தனர்.இதனால், விவசாயம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால் வடக்கிழக்கு பருவ மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படப் போகிறது என சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் விவசாயிகள் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இருந்து நேரடி நெல் விதைப்பு சம்பா சாகுபடியை துவங்கிவிட்டனர்.


டெல்டா பகுதியில் இதுவரை 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சம்பா சாகுபடி செய்யப்பட்டு 10 முதல் 15 நாட்கள் கொண்ட நாற்று பயிராக உள்ளது.மேலும் டெல்டாவில் தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு செய்தும்,நடவுக்கு நாற்றங்கால் விதைப்பும் செய்து வருகின்றனர்.தற்போது, பரவலாக கடும் வெயில் தாக்கம் ஏற்பட்டு வருவதால் இளம் பயிர்களாக உள்ள சம்பா சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். டெல்டாவில் தற்போது 50 சதவீதம் விவசாயிகள் தான் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடியை துவங்கியுள்ளனர்.மற்ற விவசாயிகள் நடவு சாகுபடி செய்யதற்போது தான் நாற்றங்கால் விதைப்பு செய்துள்ளனர்.இதனால் பாசன வாய்க்கால்களில் அதிக தண்ணீர் வந்தால், நாற்றங்கால் பாதிக்கும் என ஒரு பகுதி விவசாயிகள் தண்ணீர் வேண்டாம் என போர்க்கொடி துாக்குகின்றனர். நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள், சாகுபடி பயிர் கருகுகிறது தண்ணீர் வேண்டும் என முழங்கி வருகின்றனர்.


இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்ற பெயருக்கு பாசன வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் போதுமானதாக இல்லை. நெற்பயிர்கள் கருகி வரும் நிலையில் கீழணையில் போதிய தண்ணீர் இருந்தும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X