திருமலை நாயக்கர் மகாலில் வாகன பார்க்கிங் நெருக்கடி பந்தடி தெருவை பயன்படுத்துமா மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:13

மதுரை, மதுரை திருமலை நாயக்கர் மகாலின் முன்

பகுதியில் வாகன பார்க்கிங் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மகால் வளாகத்தில் நெருக்கடியும், சுற்றுலா பயணிகள் வளாகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் தொடர்கிறது.

மகாலில் முன் பகுதியில் உள்ள துளசிராம்

பூங்காவை மாநகராட்சி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை பராமரித்து வந்தது. தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் கணேசன், இதனை தொல்லியல் துறையின் பராமரிப்பிற்கு தரவேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியதால்

பூங்கா தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு சென்றது.

இத்துறையால் பூங்காவை பராமரிப்பு செய்ய முடியாததால் பூங்கா முழுமையாக பாழ்பட்டது. மீண்டும் தொல்லியல் துறை இதனை மாநகராட்சியிடம் ஒப்படைத்து. இது டூவீலர் ஸ்டாண்ட்டாக மாறியுள்ளது.

மகாலின் முன்பகுதியில் கார்,வேன்கள் நிறுத்தப்படுகிறது. சீசன் நேரங்களில் இங்கு நெரிசல் ஏற்படுகிறது. விளக்குத்துாண் பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவோர் தங்களது கார்களை மகால் வளாகத்தில் பார்க்கிங் செய்வதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.

மகாலின் அருகில் பந்தடி 1வது தெரு 500மீ., நீளம் 8 மீ., அகலம் கொண்டது. இந்த இடத்தில் மகால் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி வருகிறது. இங்கு கார், வேன் நிறுத்தும் வகையில் ஒரு பக்க பார்க்கிங் வசதி ஏற்படுத்தலாம். டூவீலர்களையும் இங்கு நிறுத்தலாம்.

பார்க்கிங் வசதியை பந்தடி தெருவிற்கு மாற்றினால் மகாலின் முன்பகுதியை சுற்றுலா பயணிகள் ரசிக்கவும், போட்டோ எடுக்கவும் வசதியாக இருக்கும். மட்டுமின்றி பாதுகாப்பும் மேம்படும். தற்போது உலக

சுற்றுலா விழா கொண்டாட்டங்கள் நடைபெறும்

நிலையில் இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பது

சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பு.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-செப்-201813:36:36 IST Report Abuse
Loganathan Kuttuva மஹாலின் வடக்கு பகுதியிலும் வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X