'பார்ஸ்டல்' பள்ளி கிளைச்சிறையாகுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:19

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, 'பார்ஸ்டல்' பள்ளியில், இளம் சிறைவாசிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கிளைச் சிறையாக மாற்ற வேண்டும் என்று, வக்கீல்கள் சார்பில் சிறைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில், கடந்த, 1981ம் ஆண்டு முதல் கிளைச்சிறை செயல்பட்டது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும், 19 வயது முதல், 21 வயது வரை உள்ளவர்களை, புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீசாரின் அலைச்சலை தவிர்க்க, கடந்த, 2011ம் ஆண்டு பொள்ளாச்சி கிளைச்சிறை, இளம் பருவ சிறைவாசிகளுக்கான சீர்திருத்தப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டது.

மொத்தம், 97 பேரை சிறையில் அடைக்க வசதிகள் உள்ளன. சிறை கண்காணிப்பாளர், இரண்டு முதன்மை வார்டன்கள், மூன்று தலைமை காவலர்கள், ஆறு காவலர்கள், ஒரு துப்புரவு பணியாளர், ஒரு சமையலர் நியமிக்கப்பட்டனர். இளம் சிறைவாசிகளுக்கு, யோகா பயிற்சி அளிப்பதுடன், படிப்பதற்கு புத்தகங்களும், வேலைவாய்ப்புக்கு உதவும் தொழிற்

பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில், 19 முதல், 21 வயது வரை உள்ளவர்களும் அடைக்கப்படுவதால், பொள்ளாச்சியில் உள்ள இளம் பருவ சிறைவாசிகள் சீர்திருத்தப்பள்ளி வெறிச்சோடி உள்ளது. தற்போது, இரண்டு கைதிகள் மட்டும் உள்ளனர்.

'பொள்ளாச்சி பார்ஸ்டல் பள்ளியை, கிளைச் சிறையாக மாற்ற வேண்டும். கொலை மற்றும் போதை கடத்தல் வழக்குகளை தவிர மற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை பொள்ளாச்சியில் அடைக்கலாம். இதனால், போலீசார் அவதிப்படுவதை தவிர்க்க

முடியும் என, ஆய்வு செய்த மாவட்ட நீதிபதியும் கருத்து தெரிவித்ததாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

மூத்த வக்கீல், மீரான்மொய்தீன் கூறுகையில், ''பொள்ளாச்சியில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த பொள்ளாச்சி அழைத்து வரவேண்டியுள்ளதால், போலீசாருக்கு சிரமமும், காலவிரயமும் ஏற்படுகிறது.

சிறையில் உள்ள நபரை சந்திக்க வக்கீல்கள் கோவை செல்ல வேண்டியதுள்ளது. எனவே, இளம் வயது சிறைவாசிகளின்றி உள்ள பார்ஸ்டல் பள்ளியை, கிளைச்சிறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X