அரசு அறிவித்த பணம் வரவில்லை கரும்பு விவசாயிகள் போராட முடிவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:26

நெல்லிக்குப்பம்:தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த பணத்தை நடப்பு கரும்பு பருவம் முடிவதற்குள் வழங்கா விட்டால் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு கூடுதல் விலையை அறிவிக்காமல் நடப்பு ஆண்டு முதல் லாபத்தில் பங்கு என்ற புதிய முறையை அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பயன் தராது. நடப்பு ஆண்டுக்கு மத்திய அரசு டன் ஒன்றுக்கு 2,550 அறிவித்தது.
அந்த விலையை தனியார் ஆலைகள் வழங்குகின்றன. சட்டசபையில் கரும்பு டன் ஒன்றுக்கு 2,750 உறுதி செய்யும் வகையில் தனியார் ஆலைகள் வழங்கிய தொகையான 2,550 ரூபாய் போக மீதி 200 ரூபாயை தமிழக அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என துணை முதல்வர் அறிவித்தார்.
இதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். தொழில்துறை அமைச்சர் சம்பத்தும் இரண்டு மாதத்துக்கு முன் விவசாயிகளுக்கு ஊக்கதொகை வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக கூறினார்.
ஆனால், இதுவரை தமிழக அரசு கொடுப்பதாக அறிவித்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. நடப்பு ஆண்டுக்கான கரும்பு பருவம் முடிய 18 நாட்களே உள்ளன. அடுத்த கரும்பு பருவம் அக்டோபர் 1ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகையையும் அரசு பெற்று தராவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X