பழங்குடியினர் வீடுகள் மழைக்கு சேதம் புனரமைக்க ரூ.80 லட்சம் வேண்டும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:27

ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், மழையால் சேதமடைந்த பழங்குடியினர் குடியிருப்புகளை சீரமைக்க, வனத்துறையினர் நிதி கேட்டுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம், 35 செட்டில்மென்ட்களில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

இதில், பொள்ளாச்சி வனச்சரகத்தில், பழைய சர்க்கார்பதி, நாகரூத்து ஒன்று மற்றும் இரண்டு, சின்னார்பதி உள்பட பெரும்பாலான செட்டில்மென்ட்கள் உள்ளன. இங்குள்ள, வீடுகள் மோசமான நிலையில் உள்ளன.

இதில், 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 600க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு, வனத்துறை சார்பில் 'சிமென்ட் சீட்', கான்கிரீட் மற்றும் தகர மேற்கூரையுள்ள வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான வீடுகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், பக்கவாட்டு சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

வீடுகளை புனரமைத்து கொடுக்க வலியுறுத்தி, பழங்குடியினர் பல ஆண்டுகளாக, வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் பெய்த மழையால், பொள்ளாச்சி வனச்சரகத்திலுள்ள செட்டில்மென்ட்களில், பக்கவாட்டு சுவர்கள் சிதிலமடைந்து பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளது.

இதனால், பழங்குடியின மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன், சேதமடைந்த வீடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'பொள்ளாச்சி வனச்சரக பகுதியிலுள்ள செட்டில்மென்ட்களில் மழையால் சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு செட்டில்மென்டிலும் தலா, 20 வீடுகள் என மொத்தம், 80 வீடுகளில், வீட்டுக்கு தலா ஒரு லட்சம் என, 80 லட்சம் ரூபாய் நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.

நிதி கிடைத்ததும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X