காலியாகும், 'கஜானா!'நகராட்சி நிதி நிலைமை தள்ளாட்டம் ரூ.13 கோடி நிலுவையால் திண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:35

உடுமலை:உடுமலை நகராட்சிக்கு பொதுமக்கள் கட்ட வேண்டிய, வரி வருவாய் நிலுவை, 13 கோடி உள்ளதால், அடிப்படை பணிகள் மேற்கொள்ளக்கூடநிதியின்றி, நிர்வாகம் திணறி வருகிறது.

உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உடுமலை நகராட்சிக்கு, சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி, குத்தகை வருவாய், பாதாள சாக்கடை திட்ட கட்டணம் என, ஆண்டுக்கு, 12 கோடி ரூபாய் வருவாய்

உள்ளது. நகராட்சியில், புதிய குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், நிதி இருப்பும் குறைந்துள்ளது. கடன் அதிகரித்த நிலையில், வரி இனங்கள் வசூலாகாமல், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சிக்கு வருவாய் இனங்களான, சொத்து வரியில், 4.75 கோடி ரூபாய், தொழில் வரியில், 1.50 கோடி ரூபாய், குடிநீர் வரி, 2.50 கோடி ரூபாய், குத்ததை இனங்கள் மூலம், 4.75 கோடி ரூபாய், பாதாள சாக்கடை கட்டணம் ஒரு கோடி ரூபாய் என பல்வேறு இனங்கள் மூலம், 16 கோடி ரூபாய் வரை நடப்பு ஆண்டு நிலுவை இருந்தது.

சுகாதார பணி, குடிநீர் திட்ட பராமரிப்பு, மின் கட்டணம், நிர்வாக செலவினம், வளர்ச்சி பணிகளுக்கு போதிய நிதி இல்லாமல், பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. துப்புரவு பணியாளர்கள், அலுவலர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதற்கு கூட முடியாமல் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வர வேண்டிய, நிதியும் வரவில்லை. மத்திய அரசின், நிதிக்குழு மானிய நிதி, துாய்மை இந்தியா திட்ட நிதி என, 2.75 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யவில்லை. அரசு நிதி வராததோடு, வரி வசூலும் குறைந்துள்ளதால், நகராட்சி நிர்வாகம் நிதி நிலைமை தள்ளாடி வருகிறது.

புதிதாக ரோடு அமைத்தல், தெரு விளக்கு உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்கள் என எதுவும் மேற்கொள்ள முடியாமல் நடப்பு ஆண்டு நிலுவையில், இதுவரை மூன்று கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை என வரி நிலுவையை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. நகராட்சி வாகனம் மூலம், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, பொதுமக்கள் வரி நிலுவையை செலுத்த வேண்டும் என, வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு உத்தரவு அடிப்படையில், சொத்து வரி, 50 முதல் நுாறு சதவீதம் வரையும், குடிநீர் கட்டணம், வைப்புத்தொகை ஆகியவற்றையும் அதிகரித்துள்ளது.

குடிநீர் கட்டணம் உயர்வு, டெபாசிட் கட்டணம் உயர்வு, புதிதாக பாதாள சாக்கடை திட்டத்திற்கு கட்டணம், குப்பை வரி, சொத்து வரி உயர்வு என, மக்கள் பாதித்து வரும் நிலையில், வரி வசூலிலும் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருவது, மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X