ஐந்தறிவு ஜீவன்களின் நான்கு வயிறு போராட்டங்கள் மண்ணை ஆட்டிப்படைக்கும் பாலிதீன் சாபங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:36

சில நிமிட சுமை துாக்கியாக பயன்படுத்தப்படும் பாலிதீன் பைகள் துார எறியப்படும் போது, மண்ணில் சிதைந்து போவதற்கு பல ஆண்டுகளாகிறது. மண்ணில் மக்குவதற்கே ஆண்டுகள் பலவாகும் பொழுது கால்நடைகளின் வயிற்றுக்குள் சென்ற பாலிதீன் பைகள் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும்?

ஆடுகள் மற்றும் மாடுகள் பகுத்தறியாமல் உண்ணும் பழக்கமுடையவை.

குப்பையில் மேயும் போது பாலிதீன் பையில் காய்கறி கழிவுகள் இருந்தால் பாலிதீன் பையையும் சேர்த்தே தின்னுகின்றன.

கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்காத போதும், உடலில் சத்துக் குறைபாடுள்ள போதும், சினையாக

இருக்கும் போதும்…

பசி அதிகமாக இருக்கும்.

வெளியே கிடைப்பதை எல்லாம் பாரபட்சம் பார்க்காமல் வயிற்றுக்கு கொண்டு செல்கின்றன. மாடுகளுக்கு வயிறு நான்கு பாகமாக இருக்கும். சாப்பிட்ட உணவு முதல் வயிற்றில் தங்கும்.

தேனடை போலிருக்கும் இரண்டாவது வயிற்றுக்கு உணவு செல்லும் போது, கம்பி, ஊசி, ஆணி, சைக்கிள் கம்பி

போன்ற பொருட்கள் தங்கி விடும்.

எப்படி தெரிந்து கொள்வது

கால்நடைகள் மந்தத்தன்மையுடன் இருப்பதை வைத்தே அறிந்து கொள்ளலாம். தீவனம் உண்ணும் அளவு குறையும் அல்லது உண்ணாது. அசைபோடாது; வயிற்றுவலியால் வயிற்றை உதைத்துக் கொள்ளும். வயிறு

உப்பிய நிலையில்

இருக்கும். குறைவாகவும் கட்டியாகவும் சாணம் போடும்.

கறவை மாடுகளில் பாலின் அளவு மிகவும் குறைந்துவிடும். பாலிதீன் பைகள் வயிற்றுக்குள் சேர ஆரம்பித்தால், எந்த மருந்து கொடுத்தும்

அவற்றின் ஜீரணத்தை

சரிசெய்ய முடியாது.

அறுவை சிகிச்சை ஒன்றே சரியான தீர்வு என்கிறார், மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை

பல்கலைக்கழக ஆய்வு மையத் தலைவர் உமாராணி.

அவர் கூறியது:

பாலிதீன் குப்பை வயிற்றுக்குள் சேர்ந்து கல் போன்று இறுகி விடும். அதன் பின் அஜீரணக் கோளாறு மற்றும் அடைப்பை ஏற்படுத்தும். இந்த குப்பை வயிற்றில் உரசி சுவர்ப்

பகுதியை சேதப்படுத்தி புண்ணாக்குகின்றன.

ஆணி, ஊசி, கூர்மையான இரும்பு பொருட்களையும் அவை சேர்த்தே உண்கின்றன. கூர்மையான பொருட்கள் இடம் மாறும் போது உதரவிதானத்தை குத்திக் கிழித்து மார்பு கூட்டுக்குள் நுழைந்து இருதயத்தையும் குத்தி, செயல் படுவதை பாதிக்கும்.

அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்கி அவற்றை அற்பாயுளில் பறிகொடுத்து, பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர் மாடுகளின் உரிமையாளர்கள்.

கொட்டகையில் கண்ட இடங்களில் கம்பிகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மாடுகள் மேயும் புல்வெளிகளில் கம்பிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் அடர்தீவனம் கலந்து கொடுக்கும் போது தொட்டியின் அடிப்பகுதியால் கையால் கிளறி பார்க்க வேண்டும். ஆடுகளிலும் இதே பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்கிறோம் என்கிறார் உமாராணி.

மேலும் அறிய 0452 -248 3903.

தீர்வு … நம் கைகளில்

ஒவ்வொரு முறை பாலிதீன் குப்பையை வீசி எறியும் போது, மண்ணை மட்டுமல்ல… கால்நடைகளையும் மலடாக்க துணை போகிறோம் என்பதை நினைவில் கொள்வோம். எனவே பாலிதீன் பைகளை தவிர்ப்போம்.

அரிசி களைந்த நீரையும் காய்கறி குப்பையையும் ஒரு வாளியில் சேகரித்து, வீட்டு வாசலில் வைத்தால் கால்நடைகள் வீடு தேடி வந்து சாப்பிடும்.

குப்பையை தரம்பிரித்து குப்பை தொட்டிக்கு அனுப்புவோம்.

-எம்.எம்.ஜெயலெட்சுமி


மாடுகளை மீட்டவர்களின் அனுபவங்கள்

சினை மாடு பிழைத்துக் கொண்டதுஎட்டுமாத சினையாக இருந்த மாடு இரையெடுக்கவில்லை. கால்நடை ஆம்புலன்ஸ் 1962 மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஸ்கேனில் பார்த்த போது செரிமானமாகாத பொருட்கள் இருந்தது. முதல், 2வது வயிற்றில் இருந்து 50 கிலோ அளவு பாலிதீன் பொருட்களை எடுக்கப்பட்டது. நான்காவது வயிற்றில் இருந்து

5 கிலோ அளவில் கழிவுகள் எடுக்கப்பட்டது. தற்போது மாடு நன்றாக உள்ளது. உள்ளே இருக்கும் கன்றுகுட்டியும் ஆரோக்கியமாக உள்ளது.

காளிதாஸ், சமயநல்லுார்

ஜல்லிக்கட்டு மாட்டை மீட்டோம்

கருப்பன் என்ற ஜல்லிக்கட்டு மாட்டை இரண்டாண்டுகளாக வளர்த்து வருகிறேன். மூன்று மாதங்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்தது. ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணினோம். வீட்டுக்கு வந்த கால்நடை டாக்டர்கள், ஸ்கேன் செய்து பார்த்தனர். ஆப்பரேஷன் பண்ண வேண்டும் என்றனர். மாட்டின் வயிற்றில் இருந்து

15 கிலோ பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை வெளியே எடுத்தனர். தற்போது நன்றாக உள்ளது.

அருண்குமார், ஊர்மெச்சிகுளம்

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X