சூழலுக்கு உகந்த களிமண் விநாயகர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:38

உடுமலை:உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, களிமண் மற்றும் காகிதத்தில் செய்த சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளில், மாவிலை தோரணம் கட்டி, விநாயகர் சிலை வைத்து, அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.

பின்னர், நீர் நிலைகளில் சிலைகளை விசர்ஜனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக, உடுமலை கடைகளில், விநாயகர் சிலை விற்பனை களை கட்டியது.

களிமண்ணால் செய்யப்பட்ட, ஒரு அடி அளவிலான விநாயகர் சிலை, 50 ரூபாய்க் கும், ஒன்றரை முதல் நான்கு அடி வரை உள்ள காகிதத்தால் செய்யப்பட்டு, இயற்கை வர்ணம் பூசிய சிலைகள், 3 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

உடுமலை ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு பகுதியிலுள்ள கடைகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால், விற்பனை களை

கட்டியது.

வியாபாரிகள் கூறியதாவது: உடுமலை, பள்ளபாளையம் பகுதியில், களிமண், காகிதத்தால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 50 ரூபாய் முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை, வடிவத்துக்கு ஏற்ப விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத மண், காகிதம், இயற்கை வர்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சிலை வாங்க வரும் மக்களும், ரசாயன கலப்பு இல்லாத சிலைகளை கேட்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக, உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, தொழிற்சாலை

கள், வணிகத்திற்காக வந்துள்ள வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவு விநாயகர் சிலைகள் வாங்குவதால், விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு, வியாபாரிகள் கூறினர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X