வரப்புயர... வேலை உறுதியளிப்பு திட்டம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
03:01

உடுமலை:விவசாயப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மரங்களுக்கு இடையே மழைநீர் சேமிக்கும் வரப்பு அமைக்கும் பணிகள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சார்பில் துவக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தற்போது, விவசாயப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலிருந்து, திடக்கழிவு மேலாண்மை, ஊராட்சிகளில் துப்புரவு பணிகள் என ஒவ்வொரு பிரிவாக, வேலை உறுதி திட்டப்பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வேலை உறுதியளிப்பு திட்டத்தால், விவசாயப்பணிகளுக்கு பணியாளர்கள் கிடைப்பதில்லை என்ற புகாருக்கும் தீர்வு அளிக்கும் வகையில், தற்போது அரசு திட்டத்தில், மாற்றங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

வரப்பு அமைத்தல், தடுப்பணை, பண்ணை குட்டை அமைப்பது என தொடர்ந்து விவசாயப்பணிகள் வேலை உறுதி திட்டத்தில் செயல்படுத்துகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக, திருப்பூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், தென்னை மரங்களுக்கு, இடையே மழை நீரை சேகரிக்கும் வகையில், வரப்பு

அமைக்கும் பணிகளை துவக்க அறிவுறுத்தியுள்ளார். இதன்படி உடுமலை ஒன்றியத்தில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு முயற்சியாக, மரங்களுக்கு இடையே வரப்பு அமைக்கும் பணிகள், செல்லப்பம்பாளையம் கிராமத்தில் முதற்கட்டமாக செயல்

படுத்தப்பட்டுள்ளது.

தென்னை உட்பட, அனைத்து மரங்களுக்கும் கால்வாய் மூலம் பாய்ச்சும் நீரை மட்டுமின்றி, மழைநீரையும் சேமித்து, தேக்கும் வகையில், 'சாசர் முறை', என்ற வடிவத்தில் வரப்பு அமைக்கப்படுகிறது. வரப்பு அமைக்கும் பணிகளில், வழக்கமாக, ஒரு பணியாளர், 1.05 கன அடி வரை, அமைக்க வேண்டும்.

ஒரு மரத்துக்கு ஒரு பணியாளர் வீதம் 'சாசர்', முறை வரப்பு அமைத்து தர வேண்டும். இவ்வாறு பணிகளை முடிப்பவர்களுக்கு, முழுமையாக, 224 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, செல்லப்பம்பாளையத்தில் இந்த புதிய முறை வரப்பு அமைத்தல் பணிக்கு, விவசாயிகள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தினர் கூறுகையில், ' உடுமலை ஒன்றியத்திலுள்ள, அனைத்து ஊராட்சிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு வரப்பு அமைப்பதில், விருப்பமுள்ள விவசாயிகள், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களில் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளில் ஈடுபடும் வேலை உறுதி திட்டப்பணியாளர்களுக்கும் முழுமையான ஊதியம் வழங்கப்படுகிறது. விருப்பள்ளவர்கள், பணியில் சேர்வதற்கும் விண்ணப்பிக்கலாம்,' என்றனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X