உதயம்! புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி... முன்னாள் அமைச்சர் கண்ணன் அதிரடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
04:24

புதுச்சேரி:புதிய அரசியல் கட்சியை துவக்க உள்ளதாக, முன்னாள் அமைச்சர் கண்ணன் அறிவித்துள்ளார்.


தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் கண்ணன், 100 அடி சாலையில் உள்ள ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். பின், புதிய கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டார்.


கண்ணன் கூறியதாவது:புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சியை விரைவில் துவக்க உள்ளேன். தேர்தல் கமிஷனை அணுகி, கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் ஒரு சில தினங்களில் துவக்கப்பட உள்ளது. தேர்தல் கமிஷனில் பதிவு செய்த பின், கட்சியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்படும்.


கடந்த 2 ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். மக்களின் கஷ்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்த்தேன். குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டு இருக்காமல், விலையை குறைப்பதற்கு, முதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும் முயற்சி எடுக்கலாம்.

சில மாநிலங்களில் வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எல்லா பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டுள்ளன. எனவே, மத்திய பா.ஜ., அரசும், மாநில காங்., அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதுச்சேரியில் மணல் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் படும் அவதியை பற்றி சிந்திக்காமல் இருப்பது, எந்த அரசாக இருந்தாலும் தவறு. 'மக்களுக்காக நாங்கள்... மக்களோடு நாங்கள்...' என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மக்களுக்காக ஓங்கி குரல் கொடுப்பதற்காகதான் இப்போது வந்துள்ளோம்.


இவ்வளவு வரிகளை வசூலிக்கலாமா?


மின்சாரத்துக்கு 250 ரூபாய் கட்டினோம்; இப்போது, 950 ரூபாய்க்கு பில் வருகிறது என்கின்றனர். மக்களால் எப்படி கட்ட முடியும்? இங்கு நல்ல தண்ணீர் கிடைக்கும்; கட்டணம் குறைவாக இருக்கும் என்பது புதுச்சேரியின் பெருமையாக இருந்தது. அதற்கும் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். குப்பைக்கும் வரி வாங்கும் வேதனையான அரசு இதுதான். குப்பைக்கும் வரி, நடப்பதற்கும் வரி, நிற்பதற்கும் வரி என்றால் மக்கள் என்ன செய்வர்?


புதுச்சேரியில் இருந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. தற்போது, வியாபாரமும் படுத்து விட்டது. நுாற்பாலையை மூடிவிட்டு, தாரைவார்க்க பேசிக் கொண்டுள்ளனர். சர்க்கரை ஆலையையும் மூடி விட்டனர். ரோடியர் மில்லை திறக்க முடியாது என சவால்விட்ட நேரத்தில், அந்த மில்லை திறக்க முடியாவிட்டால் சட்டசபைக்குள் நுழைய மாட்டேன் என அறிவித்து, ரோடியர் மில்லை திறந்து காட்டினேன். தார்மீக பொறுப்பு யாருக்கும் இல்லையே? அதற்காகத்தான் தற்போது மீண்டும் வந்துள்ளோம்.


வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்றனர். ஊருக்கு ஒருவருக்காவது வேலை தந்தார்களா? அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும்தான் நாங்கள் கட்சியை ஆரம்பித்துள்ளோம்.இவ்வாறு, கண்ணன் கூறினார்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X