கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ. 2.50 லட்சமாக உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
04:25

புதுச்சேரி:கலப்பு திருமணம் செய்து கொண்ட ஆதிதிராவிட தம்பதிக்கு ரூ. 2.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்புத் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இந்து ஆதி திராவிடர், இந்து ஆதிதிராவிடர் அல்லாதவர் உடன் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ. ஒரு லட்சத்தை, ரூ. 2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி 2018-2019 நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதல்வர் நாராயணசாமி, துறை அமைச்சர் கந்தசாமி ஒப்புதலோடு, கடந்த 14.9.2017 அன்று முதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு, கலப்பு திருமண ஊக்கத்தொகை, ரூ. 2.50 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை, கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கலப்பு திருமணம் செய்த ஆதி திராவிட தம்பதி இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X