மின் கட்டண பிரச்னைகளுக்கு தீர்வு காண... நடவடிக்கை! சாப்ட்வேரை மேம்படுத்த அமைச்சர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2018
05:07

மின் கட்டணம் தாறுமாறாக வருவதாக எழுந்துள்ள புகார்களை தொடர்ந்து, மின் கட்டண சாப்ட்வேரை மேம்படுத்துமாறு, அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.



புதுச்சேரியில், மின் கட்டணம் மிக அதிகமாக வருவதாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட் மீட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்ட பின், மின் கட்டணம் எகிறி விட்டதாக, பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனால், மின்துறை அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நாள்தோறும் படையெடுத்து வருகின்றனர்.



மின் கட்டணம் தொடர்பாக, சட்டசபையிலும் எம்.எல்.ஏ.,க்கள் சரமாரியாக புகார் தெரிவித்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக, செயற்பொறியாளர் தலைமையில் குழுவை உடனடியாக அமைத்து, மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார். இருந்தபோதும், மின் கட்டணம் தொடர்பான புகார்கள் குறையவில்லை. சமீபத்தில், பொதுக்கணக்கு குழுவினரும், மதிப்பீட்டுக் குழுவினரும், சீனாவில் இருந்து வாங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்கள், மின் கட்டண குளறுபடிகள் குறித்து ஆய்வு நடத்தி விளக்கம் கேட்டனர்.



ஸ்மார்ட் மீட்டர் விவகாரம் மற்றும் மின் கட்டணம் தொடர்பாகவும், மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும், வாரந்தோறும் மின்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தி, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.இந்நிலையில், சட்டசபையில் உள்ள அலுவலகத்தில், அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் நேற்று மாலை நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்துறை செயலர் தர்சம்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பிரச்னை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மின் கட்டணம் அதிகமாக வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சார கட்டணத்தை நிர்ணயம் செய்கின்ற சாப்ட்வேரை மேம்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டது.இந்த பணிகளை, தேசிய தகவல் மையத்துடன் (நிக்) இணைந்து மேற்கொள்ளுமாறு, அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார். இதற்கு, 93 லட்ச ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.



லாஸ்பேட்டையில் துணை மின்நிலையம் :


சீராகவும், தடையின்றியும் மின்சாரம் சப்ளை செய்வதற்காக, லாஸ்பேட்டையில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால், துணை மின்நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்த பிரச்னையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இடம் குறித்த பிரச்னைக்கு சமரச தீர்வு காணுமாறும், லாஸ்பேட்டையில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு, அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார்.



-நமது நிருபர்-

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X