சுங்கச்சாவடியில் சாலை கடும் சேதம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 அக்
2018
23:31

சென்னை பைபாஸ் சாலை சுங்கச்சாவடியில், சாலை சேதம் அடைந்துள்ளதால், வாகன இன்ஜின்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.பெருங்களத்துார் - புழல் இடையிலான, சென்னை பைபாஸ் சாலையில், நாளுக்குநாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இச்சாலையில், அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கார், டூ வீலர் உள்ளிட்ட வாகனங்களும் அதிகளவில் பயணித்து வருகின்றன.இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.சுங்கச்சாவடிகளுக்கு அருகே, சாலைகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக, கனரக வாகன பயன்பாட்டால், சாலையில், பள்ளம், மேடுகள் அதிகரித்துள்ளன.சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி வெளியேறும் கார்கள், சிறிய சரக்கு வாகனங்களின் கீழ் பகுதிகள், இந்த மேடான சாலைகளில் மோதி, சேதம் அடைகிறது.குறிப்பாக, விலை உயர்ந்த தாழ்வான கார்களின் அடிப்பகுதிகள், அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால், விரைவில் இன்ஜின்களும் பாதிக்கப்படும் என்பதால், வாகன உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய, திட்ட பிரிவு அதிகாரிகளுக்கு பலரும் தகவல் அனுப்பி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், டில்லி அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், வாகன உரிமையாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், சாலையை சீர்செய்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சுங்க கட்டணம் வசூலில் மட்டுமே, ஆர்வம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது


. -நமது நிருபர்-

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X