சாலையை தோண்டாமல் மழை நீர் வடிகால்முதல் முறையாக சென்னை மாநகராட்சி முயற்சிஇடையூறு தவிர்க்கப்படுவதால் மக்கள் பாராட்டு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 அக்
2018
23:37

சென்னையில் முதல் முறையாக, சாலையை தோண்டாமல், நவீன தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் முயற்சியில், மாநகராட்சி களம் இறங்கி உள்ளது. இந்த முயற்சிக்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழை நீர் வடிகால், நடைபாதை உள்ளிட்ட எந்த பணிகள் மேற்கொண்டாலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.இந்நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், முதன்முறையாக சாலை, நடைபாதையை தோண்டாமல், 'புஷ் துரு' என்ற புதிய முயற்சி மூலம், மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.நெரிசல் மற்றும் இடையூறு தவிர்க்கப்படுவதால்,




இந்த புதிய முயற்சிக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்குக்கு உட்பட்ட, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மழை நீர் வடிகால் அமைக்க, சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி முடிவு செய்தது.ஆனால், பிரதான சாலையான இச்சாலையில், வாகன போக்குவரத்து, எந்நேரமும் அதிகமாகவே காணப்படும்.




இதை சுட்டிக்காட்டி, சாலையை தோண்ட, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி மறுத்தது.இதையடுத்து, சாலை, நடைபாதையை தோண்டாமல், 'புஷ் துரு' என்ற புதிய முறைப்படி, மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது.சாலையிலிருந்து, 13 அடி ஆழத்தில், 5 அடி நீளம், 10 அடி அகலத்தில், 'ப்ரீ காஸ்ட்' முறையில், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட, 'கான்கிரீட் பாக்ஸ்'கள், 'ஹைட்ராலிக்' இயந்திரங்கள் உதவியுடன், அழுத்தம் கொடுத்து, உள்ளே தள்ளப்படுகின்றன.முதற்கட்டமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் மேம்பாலம் அருகே, 3 கோடி ரூபாய் செலவில், 300 அடி நீளத்திற்கு, வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முறையில் அமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகாலில், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் கொடுக்க முடியாது. மழை நீர் மட்டுமே செல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.




ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை நிறுத்தாமல், சுரங்கப்பாதைகள் அமைக்க, 'புஷ் துரு' முறையில், 'கான்கிரீட் பாக்ஸ்'கள் சொருகப்படுவது வழக்கம்.சென்னை மாநகராட்சி, முதல்முறையாக, சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளுக்கு, இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.இதனால், செலவு அதிகரிக்கும் என்றாலும், சாலை வெட்டுக்காக காத்திருக்காமல், நேர விரயத்தை தவிர்த்து, பொதுமக்களுக்கான இடையூறுகளையும் களைந்து, விரைந்து வடிகால் பணிகளை முடிக்க முடியும்.ஜெர்மன் வங்கி நிதி, ஜப்பான் வங்கி நிதி, உலக வங்கி நிதி ஆகியவற்றில் நடைபெற உள்ள, மழைநீர் வடிகால் திட்டங்களிலும், சிக்கலான இடங்களில், இந்த முறையில் வடிகால் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது



-நமது நிருபர்-.



 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-அக்-201807:50:14 IST Report Abuse
Loganathan Kuttuva மழை நீரில் அடித்து வரப்படும் குப்பைகள் தண்ணீர் செல்லும் வழிகளை தடை செய்யும். அதை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X